83 ரன்ஸ்.. வென்றும் சிஎஸ்கே வரலாறு காணாத அவமான சாதனை.. குஜராத்திடம் பெரிய சாதனை வெற்றி

CSK Team
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் 67வது போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சிஎஸ்கே முதலிடத்தில் இருக்கும் குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் அபாரமாக விளையாடி 230/6 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 34 (17) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த உர்வில் படேல் தம்முடைய பங்கிற்கு அடித்து நொறுக்கி 37 (19) ரன்கள் குவித்தார். மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே அரை சதத்தை அடித்து 52 (35) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பயனற்ற சாதனை வெற்றி:

மிடில் ஆர்டரில் சிவம் துபே அதிரடியாக 17 (8) ரன்னில் அவுட்டானார். ஆனால் அவரை விட சரவெடியாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ் 19 பந்தில் அரை சதத்தை அடித்து 57 (23) ரன்கள் குவித்தார். இறுதியில் ஜடேஜா 21* (18) ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்து விளையாடிய குஜராத்தை 121 ரன்களுக்குள் சுருட்டினால் கடைசி இடத்தைத் தவிர்க்கலாம் என்ற சூழ்நிலையில் சிஎஸ்கே பவுலிங் செய்தது. அதற்குத் தகுந்தார் போல் கேப்டன் கில் 13, ஜோஸ் பட்லர் 5, ரூதர்போர்ட் 0, சாருக்கான் 19 என முக்கிய வீரர்களின் விக்கெட்டை சொற்ப ரன்களில் எடுத்து சிஎஸ்கே போராடியது. ஆனால் மறுபுறம் சாய் சுதர்சன் 41 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கு பின்னடைவைக் கொடுத்தார்.

- Advertisement -

மோசமான சாதனை:

அடுத்து வந்த ராகுல் திவாட்டியா 14, ரசித் கான் 12, அர்சத் கான் 20 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 18.3 ஓவரில் 147 ரன்களுக்கு குஜராத்தை ஆல் அவுட் செய்த சிஎஸ்கே 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் பயனற்றுப் போனது. ஏனெனில் இதையும் சேர்த்து 14 போட்டிகளில் 4வது வெற்றியைப் பெற்ற சென்னை ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை முந்த முடியாமல் 10வது இடத்திலேயே தொடரை முடித்தது.

இதையும் படிங்க: பேபி ஏ.பி.டி ன்னா சும்மாவா.. சீட்டில் அமர்ந்திருந்த தோனியை கைதட்ட வைத்த ஆட்டம் – விவரம் இதோ

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே கடைசி இடத்தைப் பிடித்து வரலாறு காணாத அவமான சாதனையைப் படைத்துள்ளது. அதே சமயம் ஐபிஎல் தொடரில் குஜராத்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அணி என்ற சாதனையை சிஎஸ்கே படைத்துள்ளது. இதற்கு முன் 2024இல் இதே சிஎஸ்கே அணியிடம் 63 ரன்கள் வித்யாசத்தில் குஜராத்தின் முந்தைய பெரிய தோல்வியாகும். சென்னைக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3, நூர் அகமது 3, அன்சூல் கம்போஜ் விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

Advertisement