GT vs MI : மும்பை அணிக்கெதிராக நான் இப்படி பொளந்து கட்ட இதுவே காரணம்- ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

Shubman-Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியது.

Gill

அதனைத்தொடர்ந்து நாளை மே 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாட இருக்கிறது. பலம்வாய்ந்த மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற அந்த அணியின் துவக்க வீரரான சுப்மன் கில்லே காரணம் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது. இப்படி குஜராத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்ட சுப்மன் கில்லின் பெரிய சதம் காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் 60 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 129 ரன்கள் குவித்து அசத்தினார்.

Gill 1

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் : நான் இந்த போட்டியில் ஒவ்வொரு பந்தையும், ஒவ்வொரு ஓவரையும் முக்கியமானதாக நினைத்து விளையாடினேன். இந்த இன்னிங்சில் ஒரே ஓவரில் 3 சிக்ஸரை அடித்த பிறகு நல்ல முமென்ட்டம் கிடைத்து பெரிய ஸ்கோரை அடிக்க உதவியது.

- Advertisement -

அந்த 3 சிக்ஸர்களை அடித்த பிறகு தான் இது என்னுடைய நாள் தான் என்று உணர்ந்தான். ஒரு பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல பார்மில் இருந்து இந்த சீசனுக்கு விளையாட வந்தது எனக்கு பெரிய அளவில் உதவியது. அதோடு கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் நான் என்னுடைய ஆட்டத்தில் கியரை மாற்றினேன். அதிலிருந்து விரைவாக ரன்களை குவித்து வருகிறேன்.

இதையும் படிங்க : IPL 2033 : அஹமதாபாத் கோட்டை ஃபைனலில் சிஎஸ்கே தப்புமா? பஞ்சாப்பின் 9 வருட மாஸ் சாதனையை உடைத்து மிரட்டும் குஜராத்

அதோடு டி20 உலககோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் என்னுடைய பேட்டிங் டெக்னிக்கில் சில மாற்றங்களை செய்தேன். அதோடு கூடுதலாக நான் சற்று பலவீனமாக இருந்த இடங்களில் முன்னேற்றத்தை காணவும் பயிற்சிகளை மேற்கொண்டேன். அந்தவகையில் தொடர் பயிற்சிக்கு பிறகு இந்த ஐ.பி.எல் சீசன் எனக்கு மிகச்சிறப்பாக இருந்து வருகிறது என சுப்மன் கில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement