IPL 2033 : அஹமதாபாத் கோட்டை ஃபைனலில் சிஎஸ்கே தப்புமா? பஞ்சாப்பின் 9 வருட மாஸ் சாதனையை உடைத்து மிரட்டும் குஜராத்

GT vs CSK MS Dhoni
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 26ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் வெற்றிகரமான மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் 7 பவுண்டரி 10 சிக்சருடன் விளாசிய 129 (60) ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 233/3 ரன்கள் குவித்தது. அதை துரத்திய மும்பை அழுத்தமான போட்டியில் பதற்றமாக பேட்டிங் செய்து 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

கேப்டன் ரோஹித் சர்மா 8, டிம் டேவிட் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 61 (38) ரன்களும் திலக் வர்மா 43 (14) ரன்களும் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை. அதனால் 6வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறிய நிலையில் குஜராத் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சிஎஸ்கே தப்புமா:
அதை விட இப்போட்டியில் 233 ரன்கள் குவித்த குஜராத் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற பஞ்சாப்பின் 11 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2014 சீசனில் சென்னைக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் சேவாக் 122 ரன்கள் விளாசிய உதவியுடன் பஞ்சாப் 226/6 ரன்களை குவித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி அசத்தலான சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் நாளை நடைபெறும் மாபெரும் ஃபைனலில் சென்னையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க தயாராகியுள்ளது.

கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட போதிலும் ஹர்திக் பாண்டியா லீக் சுற்றில் சொல்லி அடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு சென்று ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற அந்த அணி இம்முறையும் அதே போல புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இருப்பினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் பெரிய ஸ்கோர் எடுக்க தடுமாறினாலும் பந்து வீச்சில் அசத்திய சென்னை 3 தொடர் தோல்விகளுக்கு பின் குஜராத்தை முதல் முறையாக தோற்கடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

ஆனாலும் மனம் தளராத குஜராத் தங்களது சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான மும்பையை தோற்கடித்து அடுத்ததாக 4 கோப்பைகளை வென்ற 2வது வெற்றிகரமான அணியான சென்னையை ஃபைனலில் வீழ்த்த தயாராகியுள்ளது. சொல்லப்போனால் மார்ச் 31ஆம் தேதி துவங்கிய 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சென்னையை தோற்கடித்த அதே அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெறும் ஃபைனலில் குஜராத் எதிர்கொள்கிறது.

CSK vs GT

அகமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் குஜராத் களமிறங்கிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அதை விட அந்த மைதானத்தில் சமீபத்தில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த சுப்மன் கில் இந்த ஐபிஎல் தொடரில் முறையே 63, 39, 45, 56, 6, 94*, 101, 129 என பெரிய ரன்களை குவித்து உச்சகட்ட ஃபார்மில் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க:MI vs GT : குஜராத் அணியில் அவர் விளையாடுன மாதிரி எங்க டீம்ல ஒருத்தரும் ஆடல – தோல்விக்கு பிறகு ரோஹித் வருத்தம்

குறிப்பாக கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்களை விளாசி அவர் ராஜாங்கம் நடத்தும் அகமதாபாத் மைதானத்தை குஜராத் கிட்டத்தட்ட தம்முடைய கோட்டையாக வைத்துள்ளது என்றே சொல்லலாம். அது போக சஹா முதல் ரசித் கான் வரை பேட்டிங் வரிசை மிகவும் ஆழமாகக் கொண்ட குஜராத் குறுகிய காலத்திலேயே சேசிங் செய்வதற்கு பெயர் போன அணியாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் வலுவான குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத்தில் சென்னை வீழ்த்தும் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement