MI vs GT : குஜராத் அணியில் அவர் விளையாடுன மாதிரி எங்க டீம்ல ஒருத்தரும் ஆடல – தோல்விக்கு பிறகு ரோஹித் வருத்தம்

Rohit Sharma
- Advertisement -

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியானது 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

MI vs GT

- Advertisement -

அதனபடி முதலில் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 129 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் 234 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் சுப்மன் கில் அருமையாக பேட்டிங் செய்திருந்தார். இந்திய மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது. ஆனாலும் நாங்கள் பந்துவீச்சில் கூடுதலாக 25 ரன்கள் வரை வழங்கி விட்டோம். ஆனாலும் நாங்கள் சேசிங் செய்ய வரும்போது நல்ல பாசிட்டிவான மனநிலையுடன் தான் வந்தோம்.

Shubman Gill

இருந்தாலும் எங்களால் பெரிய பாட்னர்ஷிப் அமைக்கமுடியாமல் போனது. இடையில் சூரியகுமார் யாதவ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இதுபோன்ற பெரிய டார்கெட்டை சேசிங் செய்யும்போது நல்ல துவக்கம் தேவை. ஆனால் பவர்பிளே ஓவர்களிலேயே நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை சந்தித்தோம்.

- Advertisement -

இப்படி துவக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்ததால் நல்ல முமென்ட்டம் கிடைக்காமல் போனது. குஜராத் அணிக்காக சுப்மன் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை இறுதிவரை வெளிப்படுத்தினார். அவரைப்போன்று ஒரு வீரர் எங்கள் அணியில் இறுதிவரை நின்று விளையாடியிருக்க வேண்டும். ஆனால் எங்களால் அது முடியாமல் போனது.

இதையும் படிங்க : GT vs MI : யாரையோ த்ரோ போடவிட்டு அடிக்கிற மாதிரி பொளந்து கட்டுறாரு – மும்பையை வீழ்த்திய பிறகு பேசிய பாண்டியா

இந்த போட்டியில் குஜராத் அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான். சுப்மன் கில் மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் தற்போது மிகச்சிறப்பான பார்மில் இருக்கிறார். இனியும் அவர் அந்த பார்மை தொடர்வார் என நம்புவதாக ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement