எனக்கு என்மேல கோபம் தான். இந்த விஷயத்தை பண்ண முடியலன்னு நெனச்சா – சுப்மன் கில் வெளிப்படை

Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது இன்று கடைசி போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Axar Patel

- Advertisement -

இதனால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாடி வருகிறது. அப்படி இருந்தும் தவான் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியதற்காக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர்களான தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சுப்மன் கில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஒரு நாள் தொடரின் துவக்க வீரராக வாய்ப்பை பெற்ற வேளையில் முதல் போட்டியில் 64 ரன்களும், இரண்டாவது போட்டியில் 23 ரண்களும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒரு பங்கினை ஆற்றியுள்ளார். அதோடு மீண்டும் தான் இந்திய அணியில் நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு அவருடைய சிறப்பான ஆட்டம் அவரது முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

Shubman Gill

இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடினாலும் இன்னும் ஒரு விடயம் தன்னால் செய்ய முடியாதது குறித்து அவர் வருத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இரண்டு போட்டிகளிலும் நான் சிறப்பாக விளையாடினாலும் என்னால் அந்த ரன்னை பெரிய அளவிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. அரைசதம் கடந்த போதும் விக்கெட்டை இழந்தது வேதனை அளிக்கிறது.

- Advertisement -

நல்ல துவக்கத்தை நான் பெரும் போது அதனை சதம் அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்து வெளியேறுவதால் நானே கோபம் அடைந்து கொள்கிறேன். பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக நாங்கள் விளையாடினாலும் என்னால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வு என்னிடமே உள்ளது.

இதையும் படிங்க : இதெல்லாம் தேவையா என கிண்டலடித்த ரசிகர்கள், எல்லாமே வதந்தியென தெளிவுபடுத்திய இங்கிலாந்து வீரர் – நடந்தது இதோ

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக துவக்க வீரராக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளித்தாலும் நிச்சயம் நான் பெரிய ரன் குவிப்புக்கு செல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில் தற்போது நான் சிறப்பாகவே விளையாடி வந்தாலும் என்னால் சதம் அடிக்க முடியாதது சற்று வருத்தத்தை அளிப்பதாகவே தனது கருத்துக்களை அவர் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement