- Advertisement -
இந்திய கிரிக்கெட்

போனமுறை பண்ண அந்த இந்தமுறை பண்ணமாட்டேன்.. கப் எங்களுக்கு தான் – சுப்மன் கில் அதிரடி

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் மண்ணில் துவங்கிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதி போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன.

இறுதிப்போட்டியில் நிச்சயம் அசத்துவேன் : சுப்மன் கில்

இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் தான் செய்த தவறை இம்முறை செய்ய மாட்டேன் என இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த முறை நாங்கள் 50 ஓவர் உலககோப்பை இறுதி போட்டியில் விளையாடிய போது நான் மிகப்பெரிய அழுத்தத்தை உணர்ந்தேன். ஏனெனில் அதுதான் எனக்கு ஐசிசி தொடரின் முதல் இறுதிப் போட்டி. எனவே நான் அந்த போட்டியில் சற்று ஆதிக்கம் செலுத்தி விளையாடுவதற்காக முயற்சித்து டைமிங்கை இழந்து விட்டேன்.

ஆனால் இம்முறை இறுதிப்போட்டியில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை உணர்ந்துவிட்டேன். ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை நாங்கள் கைப்பற்றியுள்ளதால் இந்த இறுதி போட்டியிலும் எங்களுக்கு வெற்றி பெறும் உத்வேகம் இருக்கிறது.

- Advertisement -

இந்த இறுதி போட்டியில் நிச்சயம் நான் துவக்கத்தில் மைதானத்திம் தன்மையை கணித்து சிறிது நேரத்தை செலவிட்டு பின்னர் எனக்கான நேரம் கிடைக்கும் போது அதிரடியை வெளிக்காட்டுவேன் என்று சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : அந்த இந்திய பவுலர் தான் நான் விளையாடுனதுலேயே கஷ்டமான பவுலர் – கேன் வில்லியம்சன் பகிர்வு

ஏற்கனவே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் அடுத்தடுத்த போட்டிகளில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் இறுதிப்போட்டியில் அவரது துவக்கம் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -