IND vs NZ : இறக்கமில்லாமல் அடித்து நியூசிலாந்து அணியை கதறவிட்ட இந்திய வீரர்கள் – இமாலய இலக்கு நிர்ணயிப்பு

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் கடினமான பிட்ச்சில் கடுமையாக போராடி வென்றது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கியது. அந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹர்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இசான் கிசான் மீண்டும் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டு சரிவை சரி செய்தார்கள். பவர் பிளே கடந்து 9 ஓவர்கள் நியூசிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்து 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் 4 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ராகுல் திரிபாதி 44 (22) ரன்களை விளாசி அரை சதத்தை அடிக்காமல் சுயநலமின்றி அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் வெளுத்து வாங்கிய சுப்மன் கில்ளுடன் அடுத்ததாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் இம்முறை வழக்கம் போல முதல் பந்திலிருந்தே அதிரடியை துவக்கினார்.

- Advertisement -

மிரட்டிய கில்:
இருப்பினும் வழக்கம் போல அதிரடி தொடக்கத்தை பெற்ற அவர் இம்முறை பெரிய ரன்களாக மாற்றாமல் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் அதிரடியாக செயல்பட்டு அரைசதம் கடந்த சுப்மன் கில் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து விரைவாக ரன்களை சேர்த்தார். ஆரம்பத்தில் சீராக ரன்களை குவித்த அவர் நன்கு செட்டிலான பின் பிட்ச் மற்றும் எதிரணி பவுலர்களை புரிந்து கொண்டு அதிரடியை அதிகப்படுத்தி சதத்தை நெருங்கினார். நேரம் செல்ல செல்ல நியூசிலாந்து பவுலர்களை அசால்டாக எதிர்கொண்டு பந்தாடிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

குறிப்பாக 23 வருடம் 146 நாட்களில் சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தையும் பதிவு செய்துள்ள அவர் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சதமடித்து சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வரிசையில் தன்னை இந்திய பேட்டிங் துறையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக மீண்டும் நிரூபித்துள்ளார். தொடர்ந்து அவர் அசத்திய நிலையில் மறுபுறம் 4 பவுண்டரி 1 சிக்ருடன் ஹரிதிக் பாண்டியா 30 (17) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement -

இதையும் படிங்க: IND vs NZ : இறக்கமில்லாமல் அடித்து நியூசிலாந்து அணியை கதறவிட்ட இந்திய வீரர்கள் – இமாலய இலக்கு நிர்ணயிப்பு

ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சுப்மன் கில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 126* (63) ரன்களை 200 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து இந்தியாவுக்கு அபார பினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் நியூசிலாந்து பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய இந்தியா 20 ஓவர் 234/4 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டார்ல் மிட்சேல், ப்ளாக் டிக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement