ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துபாய் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் போட்டியானது நடைபெற்று முடிந்தது. கடந்த பல நாட்களாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி நடைபெறுமா? என்று பேசப்பட்டு வந்த வேளையில் திட்டமிட்டபடி இந்த போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
பாகிஸ்தான் வெற்றியை நாட்டிற்கு சமர்பித்த சுப்மன் கில் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன்பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமலேயே ஓய்வறைக்கு திருப்பினர். அதேபோன்று ஓய்வறையில் இருந்த இந்திய வீரர்கள், நிர்வாகிகள் என அனைவருமே எந்த பாகிஸ்தான் வீரர்களுடனும் கைகுலுக்காமல் சென்றனர்.
இந்தியாவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பயங்கரவாத தாக்குதலால் இந்திய மக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்திய வீரர்கள் இதுபோன்ற ஒரு செயலை செய்திருந்தனர். அதோடு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பரிசளிப்பு விழாவின் போது :
இந்த வெற்றியை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், இந்திய நாட்டை பாதுகாக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆவது இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா மாபெரும் சாதனை – விவரம் இதோ
“இன்றைய வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மை பாதுகாக்கும் துணிச்சல் மிக்க ஆயுதப்படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது”, “இந்தியாவின் உணர்வு களத்திலும் வெளியிலும் வாழ்கிறது” “ஜெய்ஹிந்த்” என்று பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த நெகிழ்ச்சியான பதிவு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.



