சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆவது இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா மாபெரும் சாதனை – விவரம் இதோ

Hardik Pandya
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா நிகழ்ச்சிய இந்த சாதனை குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

டி20 போட்டிகளில் ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய மாபெரும் சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களையும், ஷாஹீன் அப்ரிடி 33 ரன்களையும் குவித்தனர். அதனை தொடர்ந்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 47 ரன்களையும், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான சயிம் அயூபை தான் வீசிய முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஹார்டிக் பாண்டியா நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்னுடைய பிளான் இதுதான்.. அதுவே நான் அசத்த காரணம் – குல்தீப் யாதவ் பேட்டி

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்க அணிக்கு எதிராக அர்ஷ்தீப் சிங் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்திருந்த வேளையில் தற்போது இரண்டாவது இந்திய வீரராக போட்டியின் முதல் பந்தில் ஹார்டிக் பாண்டியா விக்கெட் எடுத்து அவருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்த போட்டியில் 3 ஓவர்களை வீசிய அவர் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement