ஆஸி தொடரில் இதை செஞ்சா.. பாபர் அசாமை முந்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனா கில் சாதனை படைப்பாரு – அசத்தல் புள்ளிவிவரம்

Shubman Gill Babar Azam
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை 8வது முறையாக வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்த இந்தியா அடுத்ததாக 2023 ஐசிசி உலக கோப்பையில் களமிறங்க உள்ளது. அதற்கு முன்பாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குவதற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் ஃபைனலில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை தெறிக்க விட்ட முகமது சிராஜ் கூடுதல் புள்ளிகளை பெற்று நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை தவிர்த்து டாப் 10 பட்டியலில் தொடர் நாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் 9வது இடத்தில் இருக்கிறார். அதே போல இந்த தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்தது உட்பட மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுப்மன் கில் 814 புள்ளிகளை பெற்றுள்ளார்.

- Advertisement -

முதலிடத்துக்கு குறி:
அதனால் 10வது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா (696) 8வது இடத்தில் இருக்கும் விராட் கோலி (708) ஆகியோரை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ள அவர் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக தம்முடைய கேரியரிலேயே உச்சகட்டமாக 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ள அவருக்கு முன்பாக முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 857 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் பாபர் அசாம் நேபாள் போட்டியை தவிர்த்து பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட நிலையில் சுப்மன் கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் ஆசிய கோப்பை தொடர்ந்து அடுத்ததாக பாகிஸ்தான் 2023 உலக கோப்பையில் தான் நேரடியாக களமிறங்க உள்ளது. அதன் காரணமாக அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இன்னும் 200 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் பாபர் அசாமை முந்தி சுப்மன் கில் உலகின் புதிய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக சாதனை படைக்க பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதை செய்தால் 2019இல் உலக நாயகனாக ஜொலித்த விராட் கோலிக்கு பின் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெறுவார். சமீப காலங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் கடந்த ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்து அசத்தினார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் முதல் முறையாக 2024 டி20 உ.கோ.. இந்தியா – பாக் மோதும் போட்டி உட்பட.. மைதான பட்டியலை வெளியிட்ட ஐசிசி

மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து அசத்துவதால் சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராகவும் அவர் போற்றப்படுகிறார். எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை பெற்றால் அது இந்தியாவுக்கு மற்றுமொரு பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement