- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடைசி 20 நாளில் 3 வெவ்வேறு சதங்கள்.. கேப்டனாக அசத்தி வரும் சுப்மன் கில் – விவரம் இதோ

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லக்னோ நகரில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அந்த வகையில் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வெளியேற்றப்பட்டு யாஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இன்று துவங்கி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

கடந்த 20 நாளில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை :

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களா களமிறங்கினர். இதன் காரணமாக கேப்டன் சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் விளையாடினார். இந்த போட்டியின் போது ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது வீரராக களத்திற்கு வந்த சுப்மன் கில் ரோகித் சர்மாவுடன் இணைந்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் ரோகித் சர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 77 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என ஒருநாள் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்தார். அதோடு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியிருந்தார். இறுதியில் 154 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.

கடந்த போட்டியின் போது 84 ரன்களை ஆட்டமிழக்காமல் விளாசிய சுப்மன் கில் இந்த இரண்டாவது போட்டியில் சதம் அடித்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. தற்போது 26 வயதாகும் அவர் இந்திய அணியின் கேப்டனாக தனது எட்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வேளையில் இன்று ஒருநாள் கேப்டனாக தனது முதல் சதத்தை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 400 ரன் அடிச்சி ஆல் அவுட்டானதன் மூலம் விசித்திரமான சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ

அதோடு கடந்த 20 நாளில் ஐ.பி.எல் போட்டிகளில் டி20 ஃபார்மெட்டில் ஒரு சதம், அதற்கடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் தற்போது ஒருநாள் போட்டியில் சதம் என மூன்று வடிவ போட்டிகளிலும் கடந்த 20 நாளில் 3 சதம் அடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -