400 ரன் அடிச்சி ஆல் அவுட்டானதன் மூலம் விசித்திரமான சாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ

IND
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஏற்கனவே தரம்சாலா நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 7 விக்கெட் விகாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையுடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்திய அணி நிகழ்த்திய விசித்திரமான சாதனை :

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 154 ரன்களையும், இஷான் கிஷன் 125 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி 400 ரன்களை கடந்து தென்னாப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

அதோடு இந்த 402 ரன்கள் மூலம் ஒருநாள் போட்டிகளில் விசித்திரமான சாதனை ஒன்றினையும் இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. அதாவது இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு அணியும் 400 ரன்கள் கடந்த போது முற்றிலுமாக ஆல் அவுட்டானதே கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்திய அணி – விவரம் இதோ

ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணி 402 ரன்களை எட்டிய பின்னர் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இன்னிங்சை முடித்தது. இப்படி 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட ஒரு போட்டியில் ஒரு அணி ஆல் அவுட்டாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement