ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்திய அணி – விவரம் இதோ

IND vs AFG
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜூன் 17-ஆம் தேதியான இன்று லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது :

தென்னாப்பிரிக்க அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி :

49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 154 ரன்களையும், இஷான் கிஷன் 125 ரன்களையும் குவித்தனர். பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணி அடித்த 402 ரன்கள் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் மாபெரும் சாதனை ஒன்றினை இந்திய அணி சமன் செய்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :

இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400 ரன்களை அடித்த அணியாக தென்னாப்பிரிக்க அணி 8 முறை 400 ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்தது. இவ்வேளையில் இன்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 400 ரன்களை அடித்ததன் மூலம் இந்திய அணியும் எட்டாவது முறையாக 400 ரன்களை பூர்த்தி செய்து அவர்களது சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேலும் ஒரு இந்திய வீரர் – அறிமுகமாக வாய்ப்பு

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது உறுதி.

Advertisement