13 இன்னிங்ஸ் கழித்து ஒருவழியாக பார்முக்கு வந்த சுப்மன் கில்.. இக்கட்டான நேரத்தில் – கைகொடுத்து அசத்தல்

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி இரண்டாம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது துவங்கியது. முதல் போட்டியில் அடைந்து தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

குறிப்பாக இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்று தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 396 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 253 ரன்களை மட்டுமே அடித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து விளையாடி வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 28 ரன்கள் குவித்திருந்தது.

இவ்வேளையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி இன்றைய போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களுடனும், ரோகித் சர்மா 13 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து அணியின் ரன் குவிப்பிற்கு உதவினர்.

- Advertisement -

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்கள், பட்டிதார் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி 273 ரன்கள் முன்னிலை பெற்று நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் கடந்த 13 இன்னிங்ஸ்களுக்கு பிறகு தற்போது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் ஐந்தாவது அரைசதம் இதுவாகும்.

இதையும் படிங்க : ஒரே ஆளா நின்னு இங்கிலாந்து மிடில் ஆர்டரை கிழித்துவிட்டார்.. இந்திய வீரருக்கு பாராட்டினை தெரிவித்த – அலைஸ்டர் குக்

தற்போதைய வேளையில் 78 பந்துகளை சந்தித்து விளையாடியுள்ள அவர் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 60 ரன்கள் குவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் விரைவில் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற பேச்சுக்கள் எழுந்த வேளையில் இக்கட்டான நேரத்தில் முக்கியமான ஒரு இன்னிங்ஸ்ஸை அவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement