
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியை பெற்றுள்ள வேளையில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியையும் பெறும் நாள் கூடிவந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் சமீப காலமாகவே சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்கிற விமர்சனம் அவர்மீது தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது இன்னிங்சிலும் 8 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய சர்வை சந்தித்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 119 ரன்களை அடித்து அசத்தியுள்ளார்.
அவரது இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் அவரது இந்த ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் 179 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்ஸ் மற்றும் 10 பவுண்டரி என 119 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த சதத்தின் மூலம் அவர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி நடப்பு ஆண்டில் அதிக சதங்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பேட்டிங் செய்ய கடினமாக பார்க்கப்படும் இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை மூன்று சதங்கள் மற்றும் 2 அரைசதம் என அசத்தியுள்ளார்.
இந்தியாவின் பெரிய மைதானமாக பார்க்கப்படும் அகமதாபாத் மைதானம் மட்டுமில்லாமல் இந்தியாவின் எந்த ஒரு மைதானத்திலும் ரன் குவிக்க முடியும் என்பதை அவர் கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளாக நிரூபித்து வருகிறார். குறிப்பாக இந்திய அணியில் புஜாரா இருந்து வெளியேறிய பிறகு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து வரும் அவர் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக அங்கு இடத்தை பிடிப்பார்.
இதையும் படிங்க : 81/1 டூ 158/4.. ஜாம்பவான் வால்ஷ் சாதனை சமன் செய்து.. வங்கதேசத்தை மிரட்டும் அஸ்வினுக்கு.. கோலி பாராட்டு
அதோடு மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் துணை கேப்டன் பதவி பெற்றால் ஆச்சரியப்படுவதிற்கில்லை. டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ்களில் தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் விரைவிலேயே முதல் இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பலாம்.