இவ்ளோ சூப்பரா விளையாடுறாரு இவரை போய் பெஞ்சில உட்காரவைச்சிருக்கீங்க – இளம்வீரருக்கு குவியும் சப்போர்ட்

Morgan-1
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக விளையாடி 145 ரன்கள் எடுத்து 18 ஓவரிலேயே போட்டியை முடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் சார்பில் மணிஷ் பாண்டே 51 ரன்கள் எடுத்தார்.

morgan

அதே நேரத்தில் கொல்கத்தா அணியின் சார்பில் நன்றாக விளையாடிய இளம் வீரர் சுப்மன் கில் 62 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் சுப்மன் கில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் நின்று நிதானமாக தெளிவான பொறுப்புடன் விளையாடி போட்டியை தனது அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

குறைந்த ரன்கள் தான் என்று அதிரடியாக விளையாடாமல், அதே நேரத்தில் மெத்தனமாக இருந்து விடாமலும் தெளிவாக ஆடிக்கொண்டிருந்தார்கள். சுப்மன் கில்  நன்றாக ஆடுகிறார் என்று எதிர்முனையில் நின்று அவருக்கு சப்போர்ட் செய்து அடித்து ஆடினார் இயான் மார்கன்  அவரும் 42 ரன்கள் எடுத்தார்.

gill

பல நேரங்களில் இயான் மார்கன் சுப்மன் கில் ஆட்டத்தை பார்த்து கை தட்டினார். இவர் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்றவர். ஒரு போட்டியில் ஆடினார் ஆனால் அவருக்கு பேட்டிங் கிடைக்க வில்லை. விரைவில் இவருக்கு இந்திய அணியில் முழுநேர துவக்க வீரராக இடம் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Gill 2

மேலும் ஏற்கனவே ப்ரித்வி ஷா தலைமையிலான அண்டர் 19 அணியில் ஆடி இருந்த அவர் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்து வந்தாலும் பெஞ்சிலேயே அமரவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement