கேள்விக்குறியான சுப்மன் கில்லுக்கு பதிலா.. அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுக்கலாம்.. டிகே ஓப்பன்டாக்

Dinesh Karthik 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் நகரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் கொஞ்சமும் போராடாத இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பையும் கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக அந்த போட்டியில் பேட்டிங் துறையில் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்களில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்க பவுலர்களிடம் பெட்டி பாம்பாக அடங்கினார்கள்.

- Advertisement -

டிகே ஏமாற்றம்:
இதில் ஜெய்ஸ்வால் கூட கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தான் அறிமுகமானார் என்பதால் தடுமாறுவதில் ஆச்சரியமில்லை என்று சொல்லலாம். ஆனால் கடந்த 2021இல் அறிமுகமான சுப்மன் கில் 2 வருடத்திற்கு மேலாகியும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சமமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாமல் திண்டாடி வருகிறார்.

குறிப்பாக இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 994 ரன்களை 31.06 என்ற சுமாரான சராசரியில் எடுத்து சொந்த மண்ணை விட வெளிநாட்டு போட்டிகளில் படுமோசமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேள்விக்குறியாகியுள்ள சுப்மன் கில்லுக்கு பதிலாக ரஞ்சிக் கோப்பையில் ரன்கள் மேல் ரன்கள் அடித்து வரும் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே சுப்மன் கில் பெரிய கேள்விக்குறியாக உள்ளார். அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிகராக செயல்படவில்லை. சொல்லப்போனால் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் 30 என்ற சராசரியை கொண்டிருப்பதை அவர் அறிந்திருந்தால் தம்மை தாமே அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும். இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டியில் அசத்தாமல் போனால் அவருடைய இடம் கண்டிப்பாக கேள்விக்குறியாகும்”

இதையும் படிங்க: உலகிலேயே அதுக்கு பஞ்சமே இல்லாத போதும்.. ஜெய்க்காத ஒரே டீம் இந்தியா தான்.. மைக்கேல் வாகன் ஆதங்கம்

“இந்த அணியில் மிடில் ஆர்டரில் சர்பராஸ் கான் எனும் பெயரை நாம் தவற விட்டுள்ளோம். விரைவில் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரை தவிர்த்து மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய சரியான வீரரும் தற்போது இல்லை. அதே போல ரஜத் படிதார் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வலுவான பெயரைக் கொண்ட வீரராக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement