2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோஹித் சர்மா இணைந்தால் வெளியேறப்போவது யார்? – விவரம் இதோ

Rohit-Rahul-and-Gill
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிட்டார். மேலும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் காயத்திலிருந்து மீண்டு வந்தால் மீண்டும் அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Shubman Gill 1

- Advertisement -

இப்படி காயம் காரணமாக ரோகித் சர்மா முதல் போட்டியை தவறவிட்டதால் அவருக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில், கே.எல் ராகுலுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கினார். எப்பொழுதுமே ரோகித் அணியில் இல்லாத போது சுப்மன் கில்-க்கு டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திய அவர் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து இந்திய அணியின் நல்ல முன்னிலைக்கு வழி வகுத்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கிறார் என்ற தகவல் தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Shubman Gill

அப்படி ஒருவேளை ரோகித் சர்மா இரண்டாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்றால் ரோகித்துடன் துவக்கவீராக களமிறங்கப்போவது யார்? என்பதே அனைவரது கேள்வியாக உள்ளது. இந்நிலையில் இந்த கேள்வி குறித்து பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் கூறுகையில் : தற்போதுள்ள பார்மின் அடிப்படையில் ரோகித் சர்மா அணிக்குள் வந்தால் அவருடன் ஓப்பனராக சுப்மன் கில் களமிறங்குவது தான் சரியாக இருக்கும்.

- Advertisement -

அதே வேளையில் ராகுலையும் வெளியேற்ற முடியாது. எனவே அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் இணையும் பட்சத்தில் ஒரு பவுலரை இந்திய அணி குறைத்துக் கொண்டு ராகுலை மிடில் ஆர்டரில் வைத்து விளையாட வேண்டும். ரோகித் அணிக்குள் வந்தால் ஒரு பவுலரை வெளியேற்றுவதுதான் சரியான முடிவு. அதே வேளையில் சுப்மன் கில் தான் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சச்சினின் மகன் என்பதை மறந்துடுங்க, முதல் சதமடிக்க அர்ஜுனுக்கு கொடுத்த கோச்சிங் பற்றி யோக்ராஜ் சிங் ஓப்பன்டாக்

இந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி இந்த ஆண்டு தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement