திட்டம் போட்டு அந்த சாதனையை படைக்கல.. ஹைதராபாத்தை வீழ்த்த இதான் காரணம்.. கில் மகிழ்ச்சி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 2ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 50வது போட்டியில் ஹைதராபாத் அணியை குஜராத் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 225 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்வது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 76, ஜோஸ் பட்லர் 64, சாய் சுதர்சன் 48 ரன்கள் எடுத்தனர்.

அந்த இன்னிங்ஸில் 20 ஓவரில் குஜராத் வெறும் 22 டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் மிகவும் குறைந்த டாட் பந்துகளை எதிர்கொண்ட அணி என்ற ஹைதராபாத் சாதனையை குஜராத் சமன் செய்தது. இதற்கு முன் 2024இல் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் அணியும் 22 டாட் பந்துகளை எதிர்கொண்டுள்ளது.

- Advertisement -

குஜராத் வெற்றி:

அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் அணியை சிறப்பாக பவுலிங் செய்த குஜராத் 20 ஓவரில் 186-6 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்தார். குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் சேர்த்து ஹைதெராபாத் 10 போட்டிகளில் 7வது தோல்வியை சந்தித்த நிலையில் குஜராத் 7வது வெற்றியைப் பெற்று பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டு அந்த டாட் பந்துகள் சாதனையை படைக்கவில்லை என்று தெரிவிக்கும் கேப்டன் கில் பேட்டிங்கில் அசத்தியதே வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கில் மகிழ்ச்சி:

“அந்த சாதனைக்காக திட்டமிடவில்லை. இதுவரை எப்படி விளையாடினோமோ அதே போல தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எங்களுடைய பேச்சாக இருந்தது. கருமண்ணில் உருவாக்கப்பட்ட இன்றைய பிட்ச்சில் சிக்ஸர்கள் அடிப்பது எளிதல்ல. ஆனால் நான், சாய், ஜோஸ் ஆகியோர் ஸ்கோர் போர்ட்டை தொடர்ந்து நகர்த்த வேண்டும் என்று புரிந்து கொண்ட விளையாடினோம்”

இதையும் படிங்க: வெறும் 22 மரம்.. 38 ரன்ஸ்.. தனித்துவ சாதனையை சமன் செய்த குஜராத்.. ஹைதெராபாத்தை வீழ்த்தி வெற்றி

“எங்களில் ஒருவர் கடைசி வரை விளையாட வேண்டும் என்று எப்போதும் பேசியதில்லை. எங்களது அணிக்காக சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்கும் பசியுடன் நாங்கள் இருக்கிறோம். ஃபீல்டிங் துறையில் முன்னேற வேண்டும் என்று ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பேசுகிறோம். இதுவரை அது சராசரியாகவே இருந்தது. ஆனால் இன்று அந்தத் துறையில் நாங்கள் அசத்தியதில் மகிழ்ச்சி. அனைவரும் அசத்தினர். இது போன்ற மைதானத்தில் உங்களுக்கு இலக்கைக் கட்டுப்படுத்த நிறைய பவுலர்கள் ஆப்ஷனாக இருப்பது நல்லது. அம்பயருடன் விவாதம் இருந்தது. உங்களின் 110% செயல்பாடுகளை கொடுக்க விரும்பும் போது அது போன்ற உணர்வுகள் வருவது சகஜம்” என்று கூறினார்.

Advertisement