- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெயில் எண்டரை அவுட்டாக்கிட்டு உருட்டாதீங்க.. இந்தியாவுக்கும் வீக்னெஸ் தெரியும்.. கமின்ஸ்க்கு கில் பதிலடி

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. அதனால் பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி டிசம்பர் 14ஆம் தேதி துவங்கும் மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அப்போட்டி நடைபெறும் காபா கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக 2021ஆம் ஆண்டு 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து இந்தியா வரலாறு படைத்தது. அந்த உத்வேகத்துடன் இம்முறையும் காபாவில் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. முன்னதாக அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

கமின்ஸ் உருட்டல்:

அந்த ஆட்டத்தில் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை அதிகமாக வீசியது இந்தியாவை 175க்கு சுருட்ட உதவியதாக பட் கமின்ஸ் கூறினார். அதே போல 3வது போட்டியிலும் அதிரடியான பவுன்சர் பந்துகளால் இந்தியாவை வீழ்த்தும் திட்டத்தை வைத்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் 2வது போட்டியில் டெயில் எண்டரை தவிர்த்து ஒரு பேட்ஸ்மேனை மட்டுமே கமின்ஸ் பவுன்சர் பந்தில் அவுட்டாக்கியதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையை அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் பவுன்சர் பந்தில் தடுமாறினார்கள் என்று கமின்ஸ் சொல்வது உருட்டலை போல் இருப்பதாக அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பலவீனம் இந்தியாவுக்கும் தெரியும் என்று சுப்மன் கில் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சுப்மன் கில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியாவுக்கும் தெரியும்:

“ஒரு விக்கெட்டை தவிர்த்து டெயில் எண்டர்களுக்கு எதிராகவே அவர் ஷார்ட் பந்துகளில் வெற்றிகரமாக இருந்தார். எனவே எந்த ஷார்ட் பிட்ச் பந்து திட்டத்தைப் பற்றி அவர் பேசுகிறார் என்பது எனக்கு தெரியாது. ஆஸ்திரேலியாவுக்கு எங்களுடைய பலம், பலவீனம் தெரியும். அதே போல அவர்களுடைய பலம், பலவீனங்கள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் அடிக்கடி விளையாடுகிறோம்”

இதையும் படிங்க: 98 ரன்ஸ்.. மொத்தம் 366.. பாண்டியா அணியை நாக் அவுட் செய்த ரஹானே.. ஆஸியில் மிஸ் செய்யும் ரசிகர்கள்

“எனவே எங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் திட்டங்களை பற்றி அறிந்திருக்கிறோம். நீண்ட நேரம் பேட்டிங் செய்யும் போது நான் நன்றாக உணர்கிறேன். இப்போதும் தன்னம்பிக்கையுடன் உள்ள நான் கடந்த ஆஸ்திரேலிய தொடரை போலவே சுதந்திரமாக விளையாட முடியும் என்று நம்புகிறேன். கடந்த 2 தொடர்களை நாங்கள் வென்றுள்ளதால் எந்த பயமும் இல்லை. அதனால் கடந்த போட்டியில் வெல்லவில்லை என்றாலும் யார் ஆக்ரோசமாக அல்லது தடுப்பாட்டமாக பந்து வீசுகிறார் என்பதை தாண்டி பந்தை பார்த்து விளையாட முயற்சிப்போம்” என்று கூறினார்.

- Advertisement -