
இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் ஜனவரி 18ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தோற்கடித்தது.
அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 137, கிளன் பிலிப்ஸ் 106 ரன்களை எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய இந்தியா 46 ஓவரில் 296 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
அதிகபட்சமாக விராட் கோலி 124, ஹர்ஷித் ராணா 53, நிதிஷ் ராணா 52 ரன்கள் மற்ற வீரர்கள் பெரிய ரன்களை குவிக்கவில்லை. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒரு ஒருநாள் தொடரில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி பெரும்பாலான சமயங்களில் சுமாராக விளையாடியது தோல்விக்கு காரணமானதாக கேப்டன் கில் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தொடரில் விராட் கோலி, ராணாவை தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அசத்தவில்லை என்று வருத்தத்தை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் வென்ற நாங்கள் இந்தப் போட்டிக்கு 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்த போது வந்தோம். ஆனால் அந்த சூழ்நிலையில் நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. நாங்கள் முன்னேறுவதற்கான இடங்களைப் பார்த்து முன்னேறி சிறப்பாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது”
“இத்தொடரில் தோல்வியை சந்தித்த போதிலும் விராட் கோலியின் பேட்டிங் எப்போதும் எங்களுக்கு நேர்மறையான அம்சமாகும். ஹர்ஷித் ராணா இத்தொடரில் விளையாடிய விதம் மற்றொரு நேர்மறையான அம்சமாகும். ஏனெனில் 8வது இடத்தில் பேட்டிங் செய்வது எளிது கிடையாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் இறங்கி சென்று இத்தொடரில் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது”
இதையும் படிங்க: 41 ரன்ஸ்.. கோலி, ராணா போராட்டம் வீண்.. இந்தியா வரலாறு காணாத தோல்வி.. நியூஸி சரித்திர வெற்றி
“2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நாங்கள் நித்திஷ் ரெட்டிக்கு வாய்ப்புகளைக் கொடுக்கப் பார்க்கிறோம். அந்த வாய்ப்புகளில் நாங்கள் அவருக்கு போதுமான ஓவர்களை கொடுக்கவும் முயற்சிக்கிறோம். இது போன்ற வாய்ப்புகளில் எம்மாதிரியான கலவை எங்களுக்கு வேலை செய்கிறது என்பதையும் எம்மாதிரியான பந்துகள் அவருக்கு வேலை செய்கிறது என்பதையும் நாங்கள் பார்க்கிறோம்” என்று கூறினார்.