41 ரன்ஸ்.. கோலி, ராணா போராட்டம் வீண்.. இந்தியா வரலாறு காணாத தோல்வி.. நியூஸி சரித்திர வெற்றி

IND vs NZ
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இறுதியாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 18ஆம் தேதி இந்தூரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவரில் போராடி 337/8 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 137, கிளன் பிலிப்ஸ் 106 ரன்களை இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

போராட்டம் வீண்:

அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 11 ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் சுப்மன் கில் 23 (18) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 3, கேஎல் ராகுல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 71/4 என ஆரம்பத்திலேயே இந்தியா சரிந்தது. அப்போது நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினார்.

அவருடன் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நித்திஷ் ரெட்டி அரை சதமடித்து 53 ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் நிதானமாக விளையாடிய விராட் கோலி அரை சதமடித்த போதிலும் எதிர்ப்புறம் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களில் அவுட்டாகி பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் கதை முடிந்ததாக நினைத்த போது வந்த ஹர்ஷித் ராணா அற்புதமாக விளையாடி 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

வரலாறு காணாத தோல்வி:

அதனால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ராணா 52 (43) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் சதமடித்த விராட் கோலி நியூசிலாந்துக்கு சவால் கொடுத்ததால் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவரும் 124 (108) ரன்களில் அவுட்டானதால் இந்தியாவின் கதையும் முடிந்தது.

இறுதியில் 46 ஓவரில் இந்தியாவை 296 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற நியூசிலாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு ஒருநாள் வீழ்த்தி புதிய சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிறிஸ்டியன் கிளார்க், ஜாக் போல்க்ஸ் தலா 3 விக்கட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: வெறும் 1 ரன்.. கோபம் வந்துட்டா போதுமா? வாழ்வா – சாவா போட்டியில் பாபர் அசாம் செய்த வேலையை.. விளாசும் ரசிகர்கள்

மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக தோற்ற இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. 1988, 1995, 1999, 2010, 2016, 2017, 2023 வருடங்களில் நடைபெற்ற தொடர்களில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா தற்போது முதல் முறையாக அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement