அந்த விதிமுறையை வெச்சு நாங்க 300 ரன்ஸ் அடிச்சு வரலாற்று சாதனை படைப்போம்.. குஜராத் கேப்டன் கில் நம்பிக்கை

Shubman Gill
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் 10 அணிகள் களமிறங்குகின்றன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில் தலைமையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்ற அந்த அணி அதற்கடுத்த வருடம் ஃபைனல் வரை சென்று அசத்தியது.

ஆனால் கில் தலைமையில் கடந்த வருடம் தடுமாற்றமாக விளையாடிய குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. எனவே இம்முறை சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க கில் தயாராகி வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் ஒரு போட்டியில் 300 ரன்களை ஐபிஎல் தொடரில் 300 ரன்கள் அடித்த முதல் அணியாக சாதனை படைப்போம் என்று கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

300 ரன்ஸ் சாதனை:

அதற்கு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை பெரியளவில் உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “ஒரு போட்டியில் 300 ரன்கள் அடிக்க முடியும் என்று நாம் உணரும் அளவுக்கு ஐபிஎல் தொடரின் வேகம் உச்சக்கட்டத்தை தொட்டு வருகிறது. கடந்த வருடம் சில போட்டிகளில் அதை நாம் நெருங்கினோம்”

“இம்பேக்ட் பிளேயர் விதிமுறை சுவாரசியத்தையும் ஐபிஎல் தொடரை இன்னும் பொழுதுபோக்காகவும் மாற்றுகிறது. கேப்டன்ஷிப் என்பது எனது பயணத்தின் தொடர்ச்சி என்று நம்புகிறேன். இதில் நீங்கள் ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு போட்டியிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு வித்தியாசங்களை கொண்டு வருவார்கள்”

- Advertisement -

கில் நம்பிக்கை:

“எனவே ஒரு தலைவராக, ஒவ்வொரு வீரரும் சிறந்த முறையில் செயல்பட என்ன உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமானவர்கள். கேப்டனாக அவர்களை எந்தளவுக்கு தாக்கத்துடன் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். வீரர்களின் பலம், பலவீனம் அவர்கள் தடுமாறும் போது எப்படி மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வருவது போன்ற விஷயங்கள் முக்கியம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பும்ரா இல்லாம மும்பை கஷ்டம்.. 2025 ஐபிஎல் கோப்பையை அந்த டீம் ஜெய்க்க வாய்ப்பிருக்கு.. மைக்கேல் கிளார்க்

மேலும் பேட்ஸ்மேன், கேப்டன் ஆகிய இரண்டும் தனித்தனி வேலைகள் என்று தெரிவிக்கும் அவர் கடந்த வருடம் அவற்றில் குழப்பமாக இருந்ததால் தடுமாறியதாக கூறியுள்ளார். எனவே இம்முறை பேட்டிங் செய்யும் போது கேப்டன்ஷிப் பற்றி சிந்திக்காமல் அசத்த உள்ளதாகவும் கில் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது அணியில் நல்ல வீரர்கள் இருப்பதால் இம்முறை சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement