ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் விளையாடுகின்றன. அதில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்த அவர் இந்தியாவுக்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடவில்லை. தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் குணமடைந்து வரும் அவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் முழுமையாக விளையாடாதது மும்பை அணிக்கு பெரிய பின்னடைவு என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
மும்பை கஷ்டம்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா பற்றி எனக்கு கொஞ்சம் அச்சமாக இருக்கிறது. ஏனெனில் அவர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இத்தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது பெரிய வருகிறது. அற்புதமான அவரால் எந்த நேரத்திலும் 5 விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்”
“ஆனால் முழுமையாக விளையாடும் போது தான் ஒவ்வொரு போட்டியிலும் அவரால் நன்கு செட்டிலாகி தொடர்ச்சியாக அசத்த முடியும். அப்படிப்பட்ட அவர் இல்லாமல் போனால் மும்பை இத்தொடரில் கோப்பையை வெல்வதற்கான வழியை மிகவும் கடினமாக கண்டறிய வேண்டும்” என்று கூறினார். மேலும் இத்தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணியை பற்றி கேட்டதற்கு தங்கள் நாட்டின் பட் கமின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கு வாய்ப்பிருப்பதாக கிளார்க் கணித்துள்ளார்.
ஹைதெராபாத்துக்கு வாய்ப்பு:
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. ” இங்கே நான் ஒருதலைபட்சமாக இருக்கப் போகிறேன். எனக்கு பிடித்த வீரர் அடிபடையில் பேசப்போகிறேன். அது போன்ற சூழ்நிலையில் பட் கமின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் கோப்பை வெல்லும் என்று நான் சொல்வேன். இருப்பினும் அதற்கு பவுலிங் சிறப்பாக செயல்படுவது முக்கியமாகும்”
இதையும் படிங்க: 5 போட்டியில் வெறும் 28.. மேட்ச் வின்னர் சூரியகுமார் பற்றி கவலையில்லை.. கேப்டன் பாண்டியா ஆதரவு
“கோப்பை வெல்வதற்கு ஹைதராபாத் அணியின் பேட்டிங் போதுமானதாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. கேப்டனாக கமின்ஸ் நிறையப் பாடங்களை கற்றுள்ளார். இந்த வருடமும் அவர் தனது கேப்டன்ஷிப்பை முன்னேற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களது பவுலிங் முக்கியம். அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தை சந்திக்காமல் இருப்பது முக்கியம். டெத் ஓவர் பௌலிங் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும். அதில் கமின்ஸ் பெரிய பங்காற்றுவார்” எனக் கூறினார்.