- Advertisement -

அப்படி எந்த ரூல்ஸ் சொல்லுது? இந்திய அணிக்கு கிரிக்கெட்டை பற்றி எதுவுமே தெரியாதா? கேப்டன் கில் பதிலடி

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையின் 5வது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய இந்தியா தயாராகியுள்ளது.

அப்போட்டிக்கு முன்பாக இந்திய அணியினர் வழக்கம் போல பிட்ச்சை ஆய்வதற்காக சென்றனர். ஆனால் அவர்களை தடுத்த ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் 2.5 மீட்டர்கள் தொலைவிலிருந்து பிட்ச்சை பார்த்து விட்டு செல்லுமாறு கராராக பேசினார். அதனால் கோபமடைந்த இந்திய அணியின் பயிற்சியாளர் அவரிடம் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

எந்த ரூல்ஸ் சொல்லுது:

இத்தனைக்கும் இதே மைதானத்தில் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அதற்கு முன்பாக இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் – லீ போர்ட்டிஸ் பிட்ச் மேலே நின்று கொண்டு பேசினார்கள். அந்தப் புகைப்படத்தை தோண்டி எடுத்துள்ள இந்தியர்கள் எங்களுக்கு ஒரு நியாயம், இங்கிலாந்து அணிக்கு வேறு நியாயமா? என்று போர்ட்டிஸை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் எந்த விதிமுறையும் பிட்ச்சை 2.5 மீட்டர் தொலைவிலிருந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை என இந்திய கேப்டன் சுப்மன் கில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பிட்ச்சை எப்படி பார்க்க வேண்டும் என்பது கூட இந்தியாவுக்கு தெரியாதா? என்றும் அவர் வணங்கியுள்ளார். இது பற்றி கில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சுப்மன் கில் பதிலடி:

“எனக்கு நினைவுள்ளவரை 2.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்க்க வேண்டுமென்று எந்த வழிகாட்டுதலும் இல்லை. நீங்கள் ரப்பர் காலணிகள் அல்லது வெறும் கால்களால் நடக்கும் வரை, பிட்ச்சை நெருக்கமாக சென்று பார்க்கலாம். நேற்று என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஏன் மைதானப் பராமரிப்பாளர் எங்களை நிறுத்தினார் என்று தெரியவில்லை”

இதையும் படிங்க: போன மேட்ச்லயே பென் ஸ்டோக்ஸ் இந்த கஷ்டத்தை பாத்தாரு.. அதான் வெளில போயிட்டாரு – விலகலுக்கான காரணம்

“இங்கே நாங்கள் 4 போட்டிகளில் விளையாடினோம். அந்த மைதானங்களில் பராமரிப்பாளர்கள் எங்களுக்கு அப்படி எந்த வழிகாட்டுதலும் சொல்லவில்லை. நாங்கள் போதுமான அளவுக்கு கிரிக்கெட்டை பார்த்து விளையாடியுள்ளோம். பிட்ச்களை பலமுறை நெருக்கமாக பார்த்துள்ளோம். அப்படி இருந்தும் இந்த வம்பு எதனால் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன் எங்களை எந்த மைதான பராமரிப்பாளரும் 3 மீட்டர் தொலைவாக நின்று பிட்ச்சை பார்க்குமாறு சொன்னதில்லை” என்று கூறினார்.

- Advertisement -