- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கில் பிளேயிங் லெவனில் இருக்கவே தகுதியில்ல.. அந்த 3 பேரில் ஒருவரை கேப்டனாக்குங்க.. ஸ்ரீகாந்த் விளாசல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

இந்திய பேட்டிங் துறையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்த வருடம் குஜராத் பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. மறுபுறம் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்படத் தகுதியானவராக இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அடிக்கடி காயத்தை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

பிளேயிங் லெவனில்:

எனவே அவருக்கு பதிலாக அடுத்த இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில்லை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் மோசமாக பேட்டிங் செய்த ரெக்கார்டை வைத்துள்ள சுப்மன் கில் முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியானவர் கிடையாது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

அது போன்ற சூழ்நிலையில் பும்ரா கேப்டனாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இல்லையெனில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்தியாவை தலைமை தாங்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் அணியில் சுப்மன் கில் முக்கியமானவர் கூட கிடையாது. கேப்டன்ஷிப் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் கொடுக்கப்பட வேண்டும்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் கருத்து:

“ஒருவேளை அவர் ஃபிட்டாக இல்லாத பட்சத்தில் கேஎல் ராகுல் அல்லது ரிசப் பண்ட் ஆகியோர் இந்தியாவை தலைமை தாங்க வேண்டும். விராட் கோலி விளையாடிய நம்பர் நான்காவது இடத்தில் இனிமேல் ராகுல் விளையாட வேண்டும். முன்னோக்கி செல்லும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார். அதற்கான நல்ல டெக்னிக் கொண்டுள்ள அவருக்கு அணி நிர்வாகம் நிலையான இடத்தைக் கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 2026 ஐ.பி.எல் சீசனில் தோனி கண்டிப்பா ஆடுவாரு.. அவர் கொடுத்த வாக்குறுதி – இது நியாபகம் இருக்கா?

அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டுப் போட்டிகளில் கில் கடைசியாக விளையாடிய 12 இன்னிங்ஸில் வெறும் 19 என்ற மோசமான சராசரியைக் கொண்டுள்ளார். ஒரு அரை சதத்தைக் கூட அடிக்காத அவர் இங்கிலாந்து மண்ணில் 6 இன்னிங்சில் வெறும் 88 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு கேப்டன்ஷிப் வாய்ப்பு என்பது அதிகப்படியானது என்றால் மிகையாகாது.

- Advertisement -