சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரே கடைசி சீசனாக பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தற்போது 43 வயதினை எட்டியுள்ள அவர் அடுத்த ஆண்டு வரை முழு உடற்தகுதியுடன் இருப்பது கடினம் என்பதனால் இந்த ஆண்டே ஓய்வை அறிவிப்பார் என இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலிருந்து பேசப்பட்டு வந்தது.
அடுத்த சீசனிலும் தல தோனி ஆடுவது உறுதி :
ஆனால் தற்போதைக்கு இந்த ஆண்டும் அவர் ஓய்வை அறிவிக்க மாட்டார் என்பது மட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் அவர் விளையாட இருப்பதும் மறைமுகமாக உறுதியாகியுள்ளது. ஏனெனில் தற்போதைய சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்து தற்காலிமாக வெளியேறியுள்ளார்.
எனவே அவருக்கு பதிலாக கேப்டன்சி செய்து வரும் மகேந்திர சிங் தோனி சி.எஸ்.கே அணியை வலிமைப்படுத்த வேண்டிய வேலையை செய்து வருகிறார். அதன் காரணமாக தற்போது பல்வேறு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ள தோனி சரியான காம்பினேஷனை தேர்ந்தெடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை மிகச் சிறப்பாக கம்பேக் கொடுக்க வழிவகை செய்வார்.
அதுமட்டும் இன்றி ஏற்கனவே தோனி அளித்த பேட்டி ஒன்றில் ஒருநாள் போட்டிகளில் நான் கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய போட்டியில் எனது சொந்த ஊரான ராஞ்சியில் தான் கடைசியாக விளையாடி இருந்தேன். அதேபோன்று ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் என்னுடைய கடைசி போட்டியில் விளையாடுவேன். அதன் பின்னர் ஓய்வை அறிவித்து விடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி 12 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியல் கடைசி இடத்தில் இருக்கும் வேளையில் எஞ்சியுள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இதையும் படிங்க : இந்த வாய்ப்பை எனக்கு குடுத்தா சந்தோஷமா அதை ஏத்துக்க ரெடியா இருக்கேன் – ஜிதேஷ் ஷர்மா பேட்டி
எனவே அவரால் இந்த ஆண்டு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் அடுத்த சீசனின் சில போட்டிகளில் விளையாடிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே அவர் கடைசி போட்டியுடன் விடை பெறுவார் என்று நம்பலாம்.



