2 போட்டியில் விலகும் கில்? ஆஸிக்கு எதிராக மும்முனை அட்டாக்.. இந்தியாவின் திட்டம் பற்றி வெளியான தகவல்

Shubaman Gill Ashwin
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலககோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் துவங்கியது. அதில் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வலுவான ஆஸ்திரேலியாவை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தும் முனைப்படும் களமிறங்கும் இந்தியா 2023 ஆசிய கோப்பையை வென்று சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறி நல்ல ஃபார்மில் இருக்கிறது. அதனால் இப்போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போது சுப்மன் கில் விலக உள்ளார் என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

விலகும் கில்:
குறிப்பாக கௌகாத்தியில் மழையால் ரத்து செய்யப்பட்ட நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியை முடித்துக் கொண்டு சென்னை வந்ததிலிருந்தே அவர் காய்ச்சலால் அவதிப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் சுப்மன் கில் முழுமையாக குணமடைவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மட்டுமல்லாமல் அக்டோபர் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை குணமடையாவிட்டால் பேக்-அப் ஓப்பனராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசான் கிசான் இந்த 2 போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிய வருகிறது. அதே சமயம் 2023 ஆசிய கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி அவர் அசத்தியதால் ஒருவேளை காயத்திலிருந்து குணமடைந்து நல்ல ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

ஆனாலும் ராகுல் ஆர்டரில் நன்கு விளையாடி செட்டிலாகியுள்ளதால் இஷான் கிசான் தான் ரோகித் சர்மா உடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. இது போக சென்னை சேப்பாக்கம் மைதானம் ஓரளவுக்கு சுழலுக்கு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது ஸ்பின்னராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: PAK vs NED : லீடி 4 விக்கெட்.. தரமான பவுலிங்.. பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கிய நெதர்லாந்து.. ஆரம்பத்திலேயே சாதிக்குமா?

குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் வார்னர் உள்ளிட்ட இடதுகை வீரர்களுக்கு பிறந்து வளர்ந்த மண்ணில் அஸ்வின் சவாலை கொடுப்பார் என்ற நோக்கத்துடன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய மும்முனை ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலிய எதிராக இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சிராஜ், பும்ராவுடன் 3வது வேகப்பந்து வீச்சாளராக பாண்டியா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement