க்ளாஸ் மட்டும் போதாது.. இப்படியே போன டெஸ்ட் டீம்ல இருந்து அனுப்பிடுவாங்க.. நட்சத்திர வீரரை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 33
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் தடுமாற்றமாக விளையாடி 208/8 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 5, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடி வருகிறார். முன்னதாக இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 17, சுப்மன் கில் 2 ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

முன்னேற்றம் தேவை:
அதில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமான ஜெய்ஸ்வாலை விட கில் கடந்த 2 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய நல்ல அனுபவத்தை கொண்டுள்ளார். ஆனாலும் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும் அவர் ஆசிய கண்டத்திற்கு வெளியே திண்டாட்டமாக செயல்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமையை கொண்டிருந்தாலும் தொடர்ந்து பெரிய ரன்கள் அடிக்காமல் போனால் டெஸ்ட் அணியில் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் எச்சரித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் தொடர்ந்து ரன்கள் அடிக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளையும் பார்க்கும் போது அவருக்கு அங்கே நிறைய போட்டி இருக்கிறது. இருப்பினும் அவருக்கு அணி நிர்வாகம் நிறைய வாய்ப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அந்த வாய்ப்பில் ரன்கள் வந்தாக வேண்டும்”

- Advertisement -

“தற்சமயத்தில் 50 ஓவர் கிரிக்கெட்டில் கில் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்துள்ளார். ஆனால் மற்ற 2 வகையான கிரிக்கெட்டில் அவர் இன்னும் உழைக்க வேண்டும். க்ளாஸ் அடிப்படையில் அவரிடம் தரம் இருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் தரமான பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக அவர் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 90 ரன்கள் எடுத்தார். எனவே தற்போது அவர் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும்”

இதையும் படிங்க: 124/1 டூ 194/6.. நூற்றாண்டு பழமையான மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் மோசமான சாதனை

“ஏனெனில் தற்சமயத்தில் அவருடைய சராசரி 30க்கும் குறைவாக சென்றுள்ளது. அவர் நீண்ட காலமாகவே இந்திய அணியில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் இந்திய அணியில் ஏராளமான போட்டி வரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ருதுராஜ் போன்ற நிறைய வீரர்கள் கில் இடத்தை நிரப்புவதற்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement