124/1 டூ 194/6.. நூற்றாண்டு பழமையான மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் மோசமான சாதனை

Babar Azam vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 28வது வருடமாக தோற்ற பாகிஸ்தான் டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் கடுமையாக போராடி 318 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63, உஸ்மான் கவாஜா 63, மிட்சேல் மார்ஷ் 41 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பாகிஸ்தானின் பரிதாபம்:
சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சில் சில எளிதான கேட்ச்களை கோட்டை விட்ட பாகிஸ்தான் பந்து வீச்சில் மொத்தமாக 52 உதிரிகள் எனப்படும் எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியது. அதாவது 318 ரன்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 266 ரன்கள் ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆனால் பாகிஸ்தான் அணி 20 பைஸ், 15 லெக் பைஸ், 15 ஒய்ட், 2 நோ-பால் என மொத்தம் 52 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்தது.

இதன் வாயிலாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய அணி என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. குறிப்பாக உலகிலேயே வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1877ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அப்போதிலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக அம்மைதானத்தில் நடைபெற்று டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தான் உச்சகட்டமாக ஒரு இன்னிங்ஸில் 52 ரன்களை கொடுத்து அதிக எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கிய அணியாக மோசமான சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 10 ரன்களில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு அப்துல்லா சபிக் மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோர் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் அதில் சபிக்கை 62 ரன்களில் அவுட்டாக்கிய கேப்டன் பட் கமின்ஸ் அடுத்ததாக வந்த பாபர் அசாமை 1 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கி தெறிக்க விட்டார்.

இதையும் படிங்க: சுனில் கவாஸ்கர் சொல்லியும் கேட்காத ரோஹித் சர்மா. முதல் டெஸ்ட் என்ன ஆகப்போகுதோ? – விவரம் இதோ

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ஷான் மசூட் 54 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சவுத் ஷாக்கில் 9, ஆகா சல்மான் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 2வது நாள் முடிவில் ஒரு கட்டத்தில் 124/1 என்ற நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் 194/6 என தடுமாறி வருகிறது. களத்தில் முகமது ரிஸ்வான் 29* ரன்களுடன் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 3* விக்கெட்கள் எடுத்துள்ளார்.

Advertisement