- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாபர் அசாமில் ஆல் டைம் சாதனையை நெருங்கும் சுப்மன் கில் – தென்னாப்பிரிக்க தொடரில் முந்துவாரா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை செப்டம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இந்த தொடரில் சில முக்கிய சாதனைகளை டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாபர் அசாமின் சாதனையை முந்த காத்திருக்கும் சுப்மன் கில் :

அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 54 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 1000 ரன்களை பூர்த்தி செய்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

இதுவரை இந்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 5 சதம் மற்றும் 6 அரைசதம் என 78 ரன்கள் சராசரி 946 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு முக்கிய சாதனையாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாமியின் சாதனையையும் அவர் உலக டெஸ்ட் சாம்பியன் சுழற்சியில் முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை ஒட்டுமொத்தமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக ரன்களை குவித்த வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் 126 இன்னிங்ஸ்களில் விளையாடி 6,080 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். வேறு எந்த ஒரு வீரரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6000 ரன்களை கடக்காத வேளையில் ஜோ ரூட் மிகப்பெரிய முன்னிலையில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து ஆசிய பேட்ஸ்மேன்களில் உலக டெஸ்ட் சாம்பியன் சுழற்சியில் அதிக ரன்களை அடித்த வீரராக பாபர் அசாம் 70 இன்னிங்ஸ்களில் 8 சதம் மற்றும் 19 அரைசதம் என 3,129 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு இந்த ரெண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 291 ரன்கள் தேவை.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஸ்வாப் செய்யப்பட இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் – எம்.ஐ எடுத்த அதிரடி முடிவு

இதுவரை ஒட்டுமொத்தமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 72 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 10 சதங்களுடன் 2839 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் மேலும் அவர் 291 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் பாபர் அசாமை முந்தி ஆசிய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்களை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடித்த வீரராக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -