மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஸ்வாப் செய்யப்பட இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் – எம்.ஐ எடுத்த அதிரடி முடிவு

Arjun Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். பல ஆண்டுகளாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தாலும் இதுவரை அவர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார். அப்படி அவர் விளையாடிய 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து ஏமாற்றமான செயல்பாட்டையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கரை விடுவிக்க தயாரான மும்பை இந்தியன்ஸ் :

தற்போது 26 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியில் இருந்து வெளியேறி கோவா அணிக்காக விளையாடி வரும் வேளையில் இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். ஏற்கனவே 2025 ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தின் போது அவர் சச்சின் என்ற ஒரு முகத்திற்காக மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிப்படை விலைக்கு தக்கவைக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவரை வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்வாப்பிங்கின் மூலம் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி அர்ஜுன் டெண்டுல்கரை அனுப்பிவிட்டு அங்கிருந்து ஷர்துல் தாகூரை தங்களது அணிக்கு ஸ்வாப்பிங் மூலம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ஆனாலும் ஷர்துல் தாகூர் மெகா ஏலத்தின் போது 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக அடிப்படை விலை கொண்ட அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணி ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு சில நிபந்தனைகள் லக்னோ அணியிடம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதையும் படிங்க : எங்களுக்கு 14 பேரே போதும்.. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நட்சத்திர வீரர் – விவரம் இதோ

இந்த ஆண்டு மிகப்பெரிய டிரேடிங்காக பார்க்கப்படும் சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அணி மாற்றத்திற்கு பிறகு தற்போது அர்ஜுன் டெண்டுல்கரின் அணி மாற்றமும் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான இவர் இன்றளவும் தனது இடத்திற்காக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement