டாசுக்கு பிறகு முக்கிய முடிவை கையில் எடுத்த ரோஹித் சர்மா. இஷான் கிஷன் வெளியேற்றம் – பிளேயிங் லெவன் இதோ

IND-vs-PAK
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது துவங்கியது.

இந்த உலகக் கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியாக நடைபெறவுள்ள இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறப்போவது எந்த அணி? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றத்தை நிகழ்த்தி ரோகித் சர்மா அதிரடி காட்டியுள்ளார்.

அந்த வகையில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியை தவறவிட்ட சுப்மன் கில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் விளையாடுகிறார் என்றும் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் வெளியேறுகிறார் என்றும் ரோகித் சர்மா டாசுக்கு பின்னர் அறிவித்திருந்தார். அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்த தொடரில் இவ்விரு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பெற்றுள்ள வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னிலை பெரும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலிக்கு எதிரா அந்த பாகிஸ்தான் பவுலர்லாம் ஒரு பெரிய மேட்டரே கிடையாது – ஹர்பஜன் சிங் பளீச்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement