- Advertisement -
ஐ.பி.எல்

கே.எல் ராகுலுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய – சுப்மன் கில்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

கே.எல் ராகுலுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 112 ரன்களையும் அபிஷேக் போரல் 30 ரன்களையும் குவித்தனர். குஜராத் அணி சார்பாக அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக சாய் சுதர்சன் ஆட்டம் இழக்காமல் 108 ரன்களையும், சுப்மன் கில் ஆட்டம் இழக்காமல் 93 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்த தொடரில் தற்போது 12 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய சுப்மன் கில், டெல்லி கேபிட்டல்ஸ் வீரரான கே.எல் ராகுலுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது 93 ரன்கள் அடித்த சுப்மன் கில் டி20 போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக கே.எல் ராகுல் 143 இன்னிங்ஸ்சில் 5000 ரன்களை கடந்திருந்த வேளையில் தற்போது சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க வீரருக்கு பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்.சி.பி – விவரம் இதோ

ஏற்கனவே இந்திய அணியின் வருங்கால கேப்டனாக பார்க்கப்படும் அவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் வேளையில் அவருக்கு டெஸ்ட் கேப்டன் பதவி இன்னும் சில நாட்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -