- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அப்படின்னா ஏன் 2011க்குப்பின் இந்தியாவால் ஜெய்க்க முடியல? கோலியை விமர்சித்த மஞ்ரேக்கருக்கு கில் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2020/21 டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடி வந்தார். அந்த காலகட்டங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரைக் காட்டிலும் விராட் கோலி அதிக ரன்கள் மற்றும் சதங்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வந்தார். ஆனால் அதன் பின் சறுக்கிய அவர் கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.

மறுபுறம் 2021க்குப்பின் விஸ்வரூபம் எடுத்து விளையாடும் இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்து சாதனைகளை படைத்து வருகிறார். அதைப் பார்க்கும் போதெல்லாம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்காமலேயே ஓய்வு பெற்றது தமக்கு வேதனையளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பார்க்கத் தான் ஈஸி:

அத்துடன் விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு இருப்பதிலேயே ஒருநாள் போட்டிகள் தான் மிகவும் எளிதான ஃபார்மட் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே எளிதான ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பேசாமல் விராட் கோலி மொத்தமாக ஓய்வு பெற்றிருந்தால் தாம் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றும் அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவருடைய விமர்சனத்திற்கு இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது ஒருநாள் போட்டிகள் விளையாடுவதற்கு எளிது என்றால் இந்திய அணியால் ஏன் 2011க்குப்பின் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை? என்று சுப்மன் கில் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி 2011 முதல் உலகக் கோப்பையை வெல்லவில்லை. ஒருவேளை ஒருநாள் போட்டிகள் எளிதாக இருந்தால் நாங்கள் ஒவ்வொரு 2வது உலகக் கோப்பையையும் வென்றிருப்போம்”

- Advertisement -

கில் பதிலடி:

“எனவே அப்படியெல்லாம் சொல்வது பெரிது. ஆனால் ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி எந்த ஃபார்மட்டிலும் விளையாடுவது அவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. அதற்கு நிறைய மன உறுதி, விடாமுயற்சி மற்றும் உறுதிப்பாடு தேவை. குறிப்பாக ஐசிசி தொடர்களில் வெல்வதற்கு நிறைய உறுதிப்பாடு தேவை” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஐசிசி அண்டர்-19 உ.கோ: 7 சிக்ஸ் 96 ரன்ஸ்.. சூர்யவன்சி அதிரடி.. பயிற்சி போட்டியில் ஸ்காட்லாந்தை சாய்த்த இந்தியா

அவர் கூறுவது போல ஒருநாள் போட்டிகள் பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் அந்த ஒருநாள் போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் போன்ற நிறைய வீரர்கள் தடுமாற்றமாகவே விளையாடியுள்ளார்கள். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் ஜோ ரூட்டால் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி எட்டிய உயரத்தில் பாதியைக் கூட எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -