ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இரண்டாம் தேதி குஜராத் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 225 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 76, ஜோஸ் பட்லர் 64, சாய் சுதர்சன் 48 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் ஆரம்ப முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 186/6 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களுடைய 7வது தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 2, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதையும் சேர்த்து குஜராத் 7 வெற்றியைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது.
கோபமான கில்:
முன்னதாக அந்தப் போட்டியில் நடுவர்களுடன் குஜராத் கேப்டன் சுப்மன் கில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை உண்டாக்கியது. முதலில் தமக்கு சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் வழங்கியதற்காக பெவிலியன் சென்றதும் நான்காவது நடுவருடன் கில் சண்டை போட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் அபிஷேக் சர்மா ஹைதராபாத் அணியின் வெற்றிக்காக போராடினார். அப்போது பிரசித் கிருஷ்ணா வீசிய 14வது ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா வெள்ளைக்கோட்டை கிராஸ் செய்து விளையாடினார்.
அந்தப் பந்தை அடிக்க தவறியதால் அவருடைய காலில் பந்து பட்டது. அதனால் குஜராத் அணியினர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்டும் களத்தில் இருந்த நடுவர்கள் கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து குஜராத் கேப்டன் கில் ரிவ்யூ எடுத்தார். அதை மூன்றாவது நடுவர் சோதித்த போது பந்து தரையில் பிட்ச்சான இடம் காண்பிக்கப்படவில்லை.
நடுவருடன் சண்டை:
பந்து எங்கே இம்பேக்ட் செய்யப்பட்டது மற்றும் ஸ்டம்புகளில் பந்து பட்டது என்பது மட்டுமே காண்பிக்கப்பட்டது. அதில் இம்பேக்ட் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த அழைப்புக்கு நிகராக இருந்தது தெரிந்தது. எனவே களத்தில் இருந்த நடுவர் கொடுத்த நாட் அவுட் தீர்ப்பை மீண்டும் 3வது நடுவர் வழங்கியது சுப்மன் கில்லை கோபாமடைய வைத்தது. அதனால் கோபமான கில் என்னையா ஏமாத்த பாக்குறீங்க என்ற வகையில் களத்தில் இருந்து நடுவர்களுடன் ஏன் ரிவியூவில் பந்து பிட்ச்சான இடம் காண்பிக்கப்படவில்லை என்று சண்டையிட்டார்.
இதையும் படிங்க: திட்டம் போட்டு அந்த சாதனையை படைக்கல.. ஹைதராபாத்தை வீழ்த்த இதான் காரணம்.. கில் மகிழ்ச்சி
அதற்கு நடுவர்கள் டெக்னிக்கல் அளவில் அங்கே சிறிய கிளிட்ச் இருந்ததாலேயே இம்பேக்ட் காண்பிக்கப்படவில்லை என்று சொல்லி சமாதானம் செய்தனர். அதே போல அபிஷேக் ஷர்மாவும் அவரை சமாதானப்படுத்தினார். இருப்பினும் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்த கில் களத்திலிருந்து வெளியேறி பெவிலியன் சென்று சிறிது நேரம் அமர்ந்து கொண்டு கோபத்தை தணித்தார்.



