- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 402 ரன்களை குவித்தது.

ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில் :

இதன் காரணமாக தற்போது 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியானது விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 110 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 154 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

அதோடு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்திருந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் இந்த போட்டியில் நிகழ்த்த இருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் மற்றும் தற்போதைய நட்சத்திர ஆட்டக்காரரான ஷ்ரேயாஸ் இயர் ஆகயோரது சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது இன்றைய போட்டியில் அவர் அடித்த 154 ரன்கள் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை கடந்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்காக மிகக் குறைந்த போட்டிகளில் 3000 ரன்களை அடித்த வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 72 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி 20 நாளில் 3 வெவ்வேறு சதங்கள்.. கேப்டனாக அசத்தி வரும் சுப்மன் கில் – விவரம் இதோ

இவ்வேளையில் இன்றைய போட்டியில் சுப்மன் கில் தனது 63-வது இன்னிங்ஸ்லயே 3000 ரன்களை குவித்து இந்திய அணி சார்பாக குறைந்த போட்டிகளில் 3000 ரன்களை அடித்த வீரராக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -