டி20 பார்மேட்டுக்கு சுப்மன் கில் செட்டாக மாட்டாரு.. அவரை தூக்கிட்டு நம்மால கொண்டு வாங்க – ரசிகர்கள் கருத்து

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட வேளையில் இரண்டாவது டி20 போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் முன்னிலை பெற்றது.

அதனை தொடர்ந்து இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது இன்று டிசம்பர் 14-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 100 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மற்றொரு துவக்க வீரராக விளையாடிய சுப்மன் கில்லின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது. ஏனெனில் கடந்த இரண்டாவது போட்டியின் போது டக் அவுட்டாகிய அவர், மூன்றாவது டி20 போட்டியிலும் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அடுத்தடுத்து மோசமான ஆட்டத்தை விளையாடிய சுப்மன் கில் டி20 அணியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இனி டி20 கிரிக்கெட்டிற்கு துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டை நிரந்தர ஓப்பனராக கொண்டுவர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக தனது திறனை வெளிப்படுத்தும் சுப்மன் கில் சர்வதேச டி20 போட்டிகளில் அவ்வளவாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதில்லை.

இதையும் படிங்க : எப்படி போட்டாலும் 178 ஸ்ட்ரைக் ரேட்டில் அடி.. 7 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. தெ.ஆ மண்ணில் சூரியகுமார் இரட்டை சரித்திர சாதனை

இதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட்டை இனி டி20 கிரிக்கெட்டில் களமிறக்க வேண்டும் என்றும் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கூட 5 போட்டிகளில் 223 ரன்கள் குவித்தது மட்டுமின்றி மூன்றாவது போட்டியில் சதம் அடித்தும் அசத்தியிருந்த அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? என்றும் ரசிகர்கள் தங்களது கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement