- Advertisement -
ஆசிய கோப்பை

2025 ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் விளையாடுவாரா? சந்தேகமாகியுள்ள இடம் – என்ன நடந்தது?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் அந்த தொடரினை சமன்செய்து நாடு திரும்பியது. இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு பல்வேறு தரப்பினரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

சந்தேகமாகியுள்ள சுப்மன் கில்லின் இடம் :

அண்மையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பதவியேற்ற சுப்மன் கில் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டதோடு சேர்த்து டி20 அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருந்தார்.

- Advertisement -

அதோடு அதற்கு தயாராகும் வகையில் துலீப் டிராபி தொடரிலும் விளையாட இருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து தொடர் முடிந்து நாடு திரும்பிய சுப்மன் கில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வந்ததால் தற்போது துலீப் டிராபி தொடரின் காலிறுதி சுற்று போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் தற்போது வைரஸ் காய்ச்சல் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் 4-ஆம் தேதி இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்காக துபாய் பயணிக்க இருக்கும் வேளையில் தற்போது காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் கில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

- Advertisement -

செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் சுப்மன் கில் முழு உடற்தகுதியை எட்டி மீண்டும் இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவர் துபாய் பயணிப்பார் என்றும் அப்படி ஒருவேளை அவரால் தனது உடற்தகுதியை நிரூபிக்க முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக ரிசர்வி வீரர்களில் யாரேனும் ஒருவர் துபாய் செல்ல வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : 15 பேருக்கு மேல ஒருத்தரும் வேணாம்.. ரிசர்வ் வீரர்களின் விடயத்தில் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

இருப்பினும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு இன்னும் 6 நாட்கள் இருப்பதினால் அதற்குள் சுப்மன் கில் தயாராகி இந்திய அணியுடன் இணைந்து துபாய் பயணிப்பார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியானது இந்த ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -