GT vs MI : ஐ.பி.எல் போட்டிகளில் ரிஷப் பண்டின் சாதனையை காலி செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

Gill-and-Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். அதிலும் குறிப்பாக தனது உச்சகட்ட பார்மில் அசத்தலாக விளையாடிவரும் அவர் இந்த நடப்பு 16-ஆவது சீசனில் மட்டும் 851 ரன்களை குவித்து பிரமிக்க வைத்துள்ளார்.

Gill 1

- Advertisement -

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை அவர் படைத்துள்ளார். அதன்படி மும்பை அணிக்கெதிரான போட்டியில் 60 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 129 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்த சதமானது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதமாகும். இந்நிலையில் அவர் மும்பை அணிக்கெதிரான இந்த போட்டியில் அடித்த 129 ரன்கள் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் பண்ட்டின் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ளார்.

Gill

அந்த வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த வீரராக கே.எல் 132* முதலிடத்தில் உள்ளார். அதனைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் 128* இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் கில் 129 ரன்களை அடித்ததால் இரண்டாவது இடத்தில் இருந்த ரிஷப் பண்ட்டை பின்னுக்கு தள்ளி கே.எல் ராகுலுக்கு அடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இரண்டாவது வீரராக தனது பெயரை வரலாற்றில் பதித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : உங்கள விட வினோத் காம்ளி நல்லா ஸ்டார்ட் பண்ணி காணாம போய்ட்டாரு கவனமாக இருங்க – இளம் வீரரை எச்சரித்த கபில் தேவ்

அதோடு இந்த சீசனில் மட்டும் 3 சதங்களை அடித்துள்ள அவர் சி.எஸ்.கே அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் சதமடித்தால் ஒரே சீசனில் 4 சதங்கள் அடித்த விராட் கோலி மற்றும் பட்லர் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஒருவேளை அவர் இறுதிப்போட்டியில் சதமடித்தால் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருக்கும் விராட் கோலியின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement