- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுனில் கவாஸ்கரின் இரட்டை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கரின் இரண்டு முக்கிய சாதனைகளை தகர்க்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததால் இளம் வீரரான கில்லுக்கு டெஸ்ட் கேப்டன்சி வழங்கப்பட்டது.

சுனில் கவாஸ்கரின் 2 சாதனைகளை முறியடிக்கப்போகும் சுப்மன் கில் :

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் வேளையில் நாளை துவங்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

அதனால் இந்த போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இவ்வேளையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் சுப்மன் கில் இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொடரில் இதுவரை தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 700-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தலான பார்மில் உள்ளார்.

இந்நிலையில் அவர் தகர்க்கப்போகும் சுனில் கவாஸ்கரின் இரண்டு சாதனைகள் யாதெனில் : இந்த தொடரில் இதுவரை 722 ரன்களை குவித்துள்ள அவர் மேலும் 11 ரன்களை அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த முடியும். இவருக்கு முன்பாக கடந்த 1978-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கேப்டனாக சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வருகிறது. அதனை முறியடிக்க கில்லுக்கு இன்னும் 11 ரன்கள் மட்டுமே தேவை.

- Advertisement -

அதேபோன்று ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரராகவும் சுனில் கவாஸ்கரே முதலிடத்தில் உள்ளார். கடந்த 1971-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரின் போது 774 ரன்கள் குவித்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளார். அதனை முறியடிக்க இன்னும் சுப்மன் கில்லுக்கு 53 ரன்கள் மட்டுமே தேவை.

இதையும் படிங்க : அதுல ஜடேஜாவை விட சுந்தர் தான் பெஸ்ட்.. இந்தியா குல்தீப்பை தாராளமா கொண்டு வரலாம்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

இப்படி சுனில் கவாஸ்கரின் இரண்டு முக்கிய சாதனைகளை சுப்மன் கில் தகர்க்க உள்ளார். அதுமட்டும் இன்றி இந்த போட்டியில் மேலும் 78 ரன்களை அவர் சேர்த்தால் 800 ரன்களை அடித்த முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -