அவர் தான் 2023 உ.கோ கேம் சேஞ்சரா.. இந்த தலைமுறையின் மகத்தான பிளேயரா வரப்போறாரு.. இளம் இந்திய வீரரை பாராட்டிய யுவி

Yuvraj Singh
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் அகமதாபாத் நகரில் துவங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்று புள்ளி வைத்து 2011 போல கோப்பையை வெல்லும் மிகப்பெரிய லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது.

இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு நிகரான தரத்தை கொண்ட இளம் வீரராக சுப்மன் கில் களமிறங்குகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் மறக்க முடியாத 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

யுவி பாராட்டு:
அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியில் நிலையான வாய்ப்புகளை பெற்ற அவர் கடந்த ஒரு வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்து நிறைய சாதனைகளை படைத்து வருகிறார். அதனால் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த முதுகெலும்பு வீரராகவும் அவர் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த இளம் தலைமுறையின் மகத்தான வீரராக சுப்மன் கில் இப்போதே உருவெடுத்துள்ளதாக பாராட்டும் யுவராஜ் சிங் 2023 உலகக் கோப்பையில் கேம் சேஞ்சராக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தலைமுறையின் சிறந்த வீரராக வருவதற்கான திறமை சுப்மன் கில்லிடம் இருக்கிறது. 19 – 20 வயதிலிருந்தே இதே அணுகுமுறையை கொண்டுள்ள அவர் கடினமாக உழைத்து வருகிறார்”

- Advertisement -

“சொல்லப்போனால் மற்றவர்களை காட்டிலும் குழந்தை பருவத்திலிருந்தே அவர் 4 மடங்கு அதிகமாக உழைத்து வருகிறார். அவருடன் பணிபுரிந்ததை வைத்து கில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக வருவார் என்று சொல்ல முடியும். குறிப்பாக அவர் இந்தியா வென்ற டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்தார். மேலும் தம்முடைய முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலேயே அவரை போல் எத்தனை பேர் 2 அரை சதங்கள் அடித்தார்கள் என்று எனக்கு தெரியாது”

இதையும் படிங்க: இந்த உலககோப்பை யாருக்கு சாதகம்? ஜெயிக்கப்போவது யார்? – இர்பான் பதான் மற்றும் கவாஸ்கர் கருத்து

“வரும் காலங்களிலும் அவர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் பெரிய ரன்கள் அடிப்பார். எனவே பயமற்ற விளையாட்டை விளையாடி வரும் அவர் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வெற்றியை மாற்றக்கூடியவராக இருப்பார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அவர் எதிரணி பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவார்” என்று கூறினார்.

Advertisement