IPL 2023 : சச்சினின் சாதனையையே முறியடித்த சுப்மன் கில். இதுதெரியுமா உங்களுக்கு? – விவரம் இதோ

Sachin-and-Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 62-வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணியானது அபாரமான வெற்றி பெற்றதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றிலும் நுழைந்துள்ளது.

Mohit Sharma

இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர் சுப்மன் கில் 101 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதோடு ஐபிஎல் வரலாற்றில் அவர் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனை ஒன்றிணையும் முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் சிக்ஸ் அடிக்காமல் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்திருந்தார்.

Gill

கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது 23 பந்துகளில் எந்த ஒரு சிக்ஸரையும் அடிக்காமல் அரைசதம் அடித்திருந்தார். சச்சினின் அந்த இன்னிங்ஸ்ஸே சிக்ஸ் அடிக்காமல் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக இதுவரை இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் அந்த சாதனையை நேற்று முறியடித்த சுப்மன் கில் 22 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 9 பவுண்டரிகளுடன் அதிவேக அரை சதத்தை பூர்த்தி செய்து சச்சினை விட ஒரு பந்து முன்னதாக இந்த சாதனையை முறியடித்து இருந்தார். அதோடு இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 145-க்கு மேல் ஸ்டிரைக் ரேட்டுடன் 576 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : நான் கண் மூடுறதுக்கு முன்னாடி – தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ஏன்? ஜாம்பவான் கவாஸ்கர் உருக்கமான பதில்

அதோடு முதல் 50 ரன்கள் கடந்த பிறகு தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என சுப்மன் கில் நேற்று தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement