வருங்கால நட்சத்திரமாக ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இளம் இந்திய வீரர் – முழுவிவரம் இதோ

India Dhawan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ள நிலையில் ஷிகர் தலைமையிலான இளம் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அக்டோபர் 6ஆம் தேதியன்று லக்னோவில் மழையால் தாமதமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா போராடி 249/4 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ஜானெமன் மாலன் 22, குயின்டன் டி காக் 48 என தொடக்க வீரர்கள் நல்ல ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் கேப்டன் பவுமா 8, ஐடன் மார்க்ரம் 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

- Advertisement -

அதனால் 110/4 என தடுமாறிய அந்த அணியை 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹென்றிச் க்ளாஸென் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74* (65) ரன்களும் டேவிட் மில்லர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 75* (63) ரன்களும் அடித்து காப்பாற்றினர். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் தவான் 4, கில் 3, ருதுராஜ் 19, இஷான் கிசான் 20 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

போராடி தோல்வி:
அதனால் 51/4 என்ற படுமோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 8 பவுண்டரியுடன் 50 (37) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ஷர்துல் தாகூருடன் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றி நோக்கி அழைத்து வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தாகூர் 33 (31) ரன்களில் அவுட்டானலும் கடைசி வரை வெற்றிக்குப் போராடிய சாம்சன் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் விளாசிய போதிலும் 40 ஓவரில் 240/8 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

Shubman Gill 1

வருங்கால நட்சத்திரம்:
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் 3 ரன்களை எடுத்த தொடக்க வீரர் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற நவ்ஜோத் சித்துவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 10 இன்னிங்ஸ்
2. நவ்ஜோத் சித்து : 11 இன்னிங்ஸ்
3. ஷ்ரேயஸ் ஐயர்/கேதார் ஜாதவ்/ ஷிகர் தவான் : தலா 13 இன்னிங்ஸ்

- Advertisement -

ஆனாலும் என்ன பயன் என்பது போல் கில் – தவான் ஆகிய தொடக்க வீரர்களில் யாராவது ஒருவர் 10 ரன்களை தாண்டியிருந்தால் கூட இந்தியா வென்றிருக்கும் என்றே கூறலாம். இருப்பினும் 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்று 2021இல் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று டெஸ்ட் வெற்றியில் 91 ரன்கள் விளாசி அசத்திய சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு அறிமுகமானார்.

Shubman Gill IND vs ZIM

ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறி காயத்தால் வெளியேறிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியின் பேட்டிங் துறையில் அசத்தலாக செயல்பட்டதால் மீண்டும் இந்திய வெள்ளைப் பந்து அணியில் நுழைந்தார். அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 போட்டிகளிலும் அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் அதன் பின் நடந்த ஜிம்பாப்வே தொடரிலும் முதல் முறையாக சதமடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் அவங்க 2 பேரும் இல்லாதது கஷ்டம் தான். ஆனாலும் – ரவி சாஸ்திரி வெளிப்படை

அவரது அற்புதமான ஆட்டத்தால் அந்த 2 தொடர்களையும் தலா 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் வென்ற இந்தியா கோப்பையை முத்தமிட்டது. அதனால் அந்த 2 தொடரின் தொடர் நாயகன் விருதுகளையும் வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 22 வயதிலேயே 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். அந்த நல்ல அடித்தளத்தாலேயே தற்போது இந்த சூப்பர் சாதனை படைத்துள்ள அவர் வரும் போட்டிகளிலும் வரும் காலங்களிலும் இந்தியாவுக்காக பெரிய அளவில் சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement