டி20 உலகக்கோப்பையில் அவங்க 2 பேரும் இல்லாதது கஷ்டம் தான். ஆனாலும் – ரவி சாஸ்திரி வெளிப்படை

Shastri
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரானது இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள வேளையில் இந்த உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக முன்னணி வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். அவர்கள் இருவரின் விலகலும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்திய அணி தற்போது சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

IND Japrit Bumrah

- Advertisement -

இந்நிலையில் அவர்களது விலகல் இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். சென்னை போரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை துவக்கி வைக்க :

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய ரவி சாஸ்திரி கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

Ravindra Jadeja Hardik Pandya

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாமல் போனது வருத்தம் அளித்தாலும் இது இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். கட்டாயம் இந்திய அணியானது இந்த உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை எளிமையாக சென்று கோப்பையையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

தினேஷ் கார்த்திக் ஆறாவது இடத்தில் களமிறங்குவது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும். கடந்த காலங்களை விட தற்போது இந்திய அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வரும் இளம் தலைமுறையினர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் எனில் சிகப்பு பந்து கிரிக்கெட்டில் தான் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

இதையும் படிங்க : போராடி என்ன பயன் – சஞ்சு சாம்சனை விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர், உங்க அணியை பார்க்குமாறு ரசிகர்கள் பதிலடி

ஏனென்றால் டி20 கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டால் தொலைக்காட்சியிலேயே பார்க்கலாம் அல்லது தெருக்களில் விளையாடும் போது பார்க்கலாம். ஆனால் உண்மையான கிரிக்கெட்டை நேர்த்தியாக விளையாட வேண்டும் எனில் சிகப்பு பந்து கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement