இந்த 2 பேர்ல ஒருத்தர் இந்திய அணிக்காக விளையாடியே ஆகனும் – முதல் போட்டியில் அறிமுகமாகப்போவது யார்?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி 25-ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. ஏற்கனவே இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேலையில் கேஎல் ராகுல் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

INDvsNZ

- Advertisement -

இதன் காரணமாக தற்போது மாயங்க் அகர்வால் மற்றும் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. அதேபோன்று ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து 3 ஆவது மற்றும் 4-ஆவது வீரராக விளையாடுவார்கள். அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஹா விளையாடுவார்.

இதில் 5 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடப்போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே இந்த டெஸ்ட் அணியில் மீதம் உள்ளதால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தே வேண்டும்.

iyer

அப்படி யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது அவர்களுக்கு அறிமுகம் போட்டியாக அமைய உள்ளது கூடுதல் சுவாரசியம். ஏனெனில் இதுவரை ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரில் யார் விளையாடினால் நன்றாக இருக்கும் ? இது குறித்து உங்களது கருத்துகளை பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement