ரோஹித், தோனிக்கு அடுத்து 3 ஆவது சிறந்த கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

Shreyas Iyer
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. இருப்பினும் அந்த தொடர் முடிவடைந்த கையோடு அந்த அணியின் கேப்டனாக இருந்த அவரை கொல்கத்தா அணி வெளியேற்றிய நிலையில் சாம்பியன் கேப்டனான அவரை இரண்டாவது மிகப்பெரிய தொகைக்கு மெகா ஏலத்தில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவர்களது அணியின் கேப்டனாகவும் அறிவித்தது.

3 ஆவது வெற்றிகரமான கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய சாதனை :

அப்படி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியல் நான்காவது இடத்தில் மிக வலுவான நிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

- Advertisement -

அதோடு ஏப்ரல் 15-ஆம் தேதி சண்டிகார் நகரில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 112 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தாலும் அசத்தலான பந்துவீச்சின் மூலம் கொல்கத்தா அணியை 95 ரன்களுக்கு சுருட்டி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்தது.

இப்படி பஞ்சாப் அணி பெற்ற சிறப்பான வெற்றியின் மூலம் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக ரோகித் சர்மா, தோனி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிகச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் :

- Advertisement -

பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பெற்ற இந்த கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றியோடு சேர்த்து இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் 44-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 76 போட்டிகளின் முடிவில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற வரிசையில் அவர் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜய் ஷங்கரை நம்பாம தோனி இந்த விஷயத்தை கையிலெடுத்தா சி.எஸ்.கே இன்னும் நிறைய ஜெயிக்கும் – ஹர்பஜன் சிங் கருத்து

இந்த வரிசையில் ரோகித் சர்மா 46 வெற்றிகளுடனும், தோனி 45 வெற்றிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு கீழ் கம்பீர் (43 வெற்றிகள்), விராட் கோலி (38 வெற்றிகள்), டேவிட் வார்னர் (37 வெற்றிகள் ) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement