விஜய் ஷங்கரை நம்பாம தோனி இந்த விஷயத்தை கையிலெடுத்தா சி.எஸ்.கே இன்னும் நிறைய ஜெயிக்கும் – ஹர்பஜன் சிங் கருத்து

MS Dhoni and Shankar
- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியானது கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற தங்களது ஏழாவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது.

தோனி இதைசெய்தால் இன்னும் நிறைய வெற்றி கிடைக்கும் : ஹர்பஜன் சிங்

பின்னர் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக 7-வது வீரராக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி :

- Advertisement -

11 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 26 ரன்கள் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே இந்த தொடரில் மிகவும் தாமதமாக பின் வரிசையில் களமிறங்குவதாலும், கிட்டத்தட்ட போட்டி தோல்விக்கு சென்ற பின்னர் அதிரடி காண்பிப்பதாலும் தோனியின் மீது விமர்சனங்கள் எழுந்திருந்தது. இவ்வேளையில் லக்னோ அணிக்கு எதிராக மீண்டும் அவர் அதிரடியில் அசத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

அதோடு மிக நீண்ட தோல்விக்கு பிறகு தற்போது சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் :

- Advertisement -

தோனி இனிவரும் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்காமல் விஜய் சங்கருக்கு முன்பாகவே களமிறங்க வேண்டும். ஏனெனில் விஜய் சங்கர் சிங்கள்ஸ், டபுள்ஸ் என பந்துக்கு பந்து ரன்கள் அடிக்கும் வீரராகவே இருக்கிறார். எனவே இனி தனக்கு முன்னால் விஜய் சங்கரை அனுப்புவதை நிறுத்திவிட்டு தோனி தானாக முன்வந்து களமிறங்க வேண்டும். ஏனெனில் அவர் ஆறாவதாக களமிறங்கும் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் விஜய் ஷங்கர் இதுக்கு தான் லாயக்கி.. வேற எதுவும் இல்ல – சீக்கா ஸ்ரீகாந்த் கருத்து

அவர் அதிரடியாக ஆடினால் நிச்சயம் சென்னை அணிக்கு இன்னும் வெற்றிகள் குவியும். எனவே விஜய் சங்கரை பின் தள்ளிவிட்டு தோனி முன்கூட்டியே களத்திற்கு வரலாம். அப்படி வந்தால் சென்னை அணி இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement