RR vs DC : டாஸ் வென்று தவறான முடிவினை தேர்வு செய்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Iyer
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த மைதானத்தில் வழக்கமாக டாஸ் ஜெயிக்கும் அணிகள் முதலில் பந்துவீச்சியினையே தேர்வு செய்யும். அதனால் நாங்களும் பந்துவீச்சினை தேர்வு செய்து சேசிங் செய்ய விரும்புகிறோம். இந்த மைதானம் ஸ்லோ பிட்ச் என்பதால் இந்த முடிவினை எடுத்திருக்கிறேன் என்று கூறினார்.

Rahane

ஐயரின் இந்த முடிவு தற்போது பாதகமாக அமைய வாய்ப்புள்ளது ஏனெனில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணிவீரரான ரஹானே சிறப்பாக விளையாடி 105 ரன்களை அடித்தார். அதனால் தற்போது 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மைதானம் ஸ்லோவாக இருப்பதால் டெல்லி வீரர்கள் சேசிங் செய்ய சற்று சிரமப்படுவார்கள் என்பதே எண்களின் கணிப்பு.

Advertisement