சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றி பதிவு செய்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது :
யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரு ஓவரை மட்டும் வழங்கியது ஏன்? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது. பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியா சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 201 ரன்களை மட்டுமே குவிக்க 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணியின் நட்சத்திர முதன்மை சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவர் மட்டுமே வீசியது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நட்சத்திர வீரரான சாஹல் முழுவதுமாக நான்கு ஓவர்கள் வீசும் திறமை இருந்தும் அவருக்கு நேற்று ஷ்ரேயாஸ் ஐயர் ஒரே ஓவரை மட்டுமே வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இப்படி இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரு ஓவரை மட்டுமே வழங்க என்ன காரணம்? என்பது குறித்த விளக்கத்தை ஷ்ரேயாஸ் ஐயர் போட்டி முடிந்து தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய இந்த முடிவு உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனாலும் நான் எனது உள்ளுணர்வின் அடிப்படையிலேயே இதை செய்தேன்.
ஏனெனில் ஷிவம் துபேவும், டேவான் கான்வேவும் மிடில் ஓவர்களின் போது நிலைத்து நின்று விட்டதால் அந்த நேரத்தில் யுஸ்வேந்திர சாஹலை கொண்டு வந்தால் அவருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சிப்பார்கள். யுஸ்வேந்திர சாஹல் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் தான். அவரால் போட்டியின் எந்த நேரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அப்போது எனது உள்ளுணர்வு இந்த நேரத்தில் சுழற்பந்து வீச்சாளரை அழைக்காமல் வேகப்பந்து வீச்சார்களை பயன்படுத்தலாம் என்று கூறியது.
இதையும் படிங்க : 69 ரன்கள் அடித்த டேவான் கான்வே ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறியது ஏன்? – கேப்டன் ருதுராஜ் விளக்கம்
ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷிவம் துபே சற்று சிரமப்படுவார். அந்த வகையில் தான் நான் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினேன். பின்னர் அவர் ஆட்டமிழந்ததும் தோனி புதியதாக களத்திற்கு வந்ததால் அவருக்கு எதிராக யுஸ்வேந்திர சாஹலை கொண்டு வந்தேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



